ETV Bharat / international

இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் முன்னிலை: இலங்கையின் அடுத்த அதிபராகிறார் அனுரா திசநாயக? - Dissanayake To Become Sri Lanka PM - DISSANAYAKE TO BECOME SRI LANKA PM

இந்திய நேரம் மாலை 5 மணி நிலவரப்படி இடதுசாரி வேட்பாளரான தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுரா குமார திசாநாயக முன்னிலை பெற்று வருகிறார். இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் இவர் 42 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி முகத்தில் உள்ளார்.

அனுரா குமார திசநாயக
அனுரா குமார திசநாயக (Image Credits - AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2024, 5:34 PM IST

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், இடதுசாரி வேட்பாளரான தேசிய மக்கள் சக்தி கட்சியின் (என்பிபி) அனுரா குமார திசாநாயக இரண்டாவது விருப்ப சுற்றிலும் முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் உள்ளார்.

இலங்கையின் 9வது அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் என்பிபி கட்சியின் தலைவர் 55 வயதான அனுர குமார திசாநாயக 39.52 சதவீத வாக்குகளும், எதிர்க்கட்சித் தலைவரும், சமகி ஜன பலவேகயா கட்சி வேட்பாளருமான சஜித் பிரேமதாச 34.28 சதவீத வாக்குகளும் பெற்றனர்.

எந்த வேட்பாளரும் வெற்றிக்கு தேவையான 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெறாத நிலையில், அந்நாட்டு தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, 2வது சுற்று விருப்ப வாக்குகளை எண்ணுமாறு அந்நாட்டு தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எல்.ஏ.எம். ரத்நாயக அறிவித்தார்.

இரண்டாவது சுற்று விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைமுறைப்படி, குறைந்த வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவர். மாறாக முன்னிலை பெற்ற இரண்டு வேட்பாளர்களிடையே மட்டும் போட்டி நீடிக்கும்.

இதையும் படிங்க: ஈரானில் நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 30 பேர் உயிரிழப்பு!

மேலும், வெளியேற்றப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச்சீட்டுகளில் இரண்டாவது முன்னிரிமை கணக்கில் கொள்ளப்பட்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களில் வாக்குகள் சேர்க்கப்படும். இதன்படி, இரண்டாவது விருப்ப சுற்று வாக்கு எண்ணிக்கையில் இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணி நிலவரப்படி, இடதுசாரி வேட்பாளரான தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுரா குமார திசாநாயக முன்னிலை பெற்று வருகிறார்.

இவர் 42 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி முகத்தில் உள்ளார். 55 வயதான அனுர குமார திசநாயக, இரண்டாவது இடத்தில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை (33 சதவீதம்) விட கிட்டத்தட்ட 1.3 மில்லியன் வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.

இலங்கையில் கடந்த 2022ம் ஆண்டு பொருளாதார சரிவின் உச்சத்தில் பதவியேற்ற தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, சர்வதேச நாணய நிதியத்தின் விதிகளின்படி கடுமையான சிக்கனக் கொள்கைகளை விதித்தார். இது தேர்தலில் எதிரொலித்ததன் காரணமாக ரணில் விக்கிரமசிங்கே சுமார் 17 சதவீத வாக்குகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.