ETV Bharat / international

வங்கதேச கலவரம்: ஊரடங்கை மீறினால் கண்டதும் சுட உத்தரவு! 133 பேர் பலி! - Bangladesh Riots 133 dead

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 11:32 AM IST

வங்கதேசத்தில் கலவரம் நீடித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காவல்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஆளும் அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Bangladesh Violence (AP Photo)

டாக்கா: வங்கதேசத்தில் அரசு வேலையில் சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதை கண்டித்து நாடு முழுவதும் மாணவ அமைப்பினர், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கதேசத்தில் அந்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள், உறவினர்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், அதை ரத்து செய்ய வலியுறுத்திய மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக மாறியது. வங்கதேசத்தில் இந்த போராட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன, இணையச் சேவை நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் மாணவர் அமைப்பினர் மறுத்துவிட்ட நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டாக்கா உள்ளிட்ட பகுதிகளில் மாணவர் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் போராட்டங்கள் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், கலவர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133ஆக அதிகரித்தது. இந்நிலையில், ஊரடங்கு விதிகளை மீறுவோரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் கலவரம் நீடித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காவல் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஆளும் அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர் தெரிவித்துள்ளார். மேலும் தொடர் போராட்டங்களால் ஆளும் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள்து.

கல்வி உள்ளிட்ட பணிகளுக்காக வங்கதேசம் சென்ற இந்தியர்கள் ஏறத்தாழ ஆயிரம் பேர் மீண்டும் சொந்த நாடு திரும்பியுள்ளனர். அதேபோல் அமெரிக்கர்கள் மறு உத்தரவு வரும் வரை வங்கதேசத்திற்கு செல்ல வேண்டாம் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே நடைபெற்ற போரில் ஈடுபட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில், அப்படி ரத்து செய்யப்பட்டது செல்லாது என்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் கடந்த ஜூன் 5ம் தேதி அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவே மாணவர்களின் போராட்டத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நாளை கூடுகிறது மழைக்கால கூட்டத் தொடர்! பட்ஜெட் தாக்கலில் சாதனை படைக்கும் நிர்மலா சீதாராமன்! - Parliament Monsoon session

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.