ETV Bharat / international

வங்கதேசம் வன்முறை; தீர்ப்பை மாற்றி எழுதிய உச்ச நீதிமன்றம்.. போராட்டம் ஓயுமா? - Bangladesh riot - BANGLADESH RIOT

Bangladesh riot: வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பை திரும்பப் பெற்றுள்ளது.

வங்கதேச களவரம் தொடர்பான புகைப்படம்
வங்கதேச களவரம் தொடர்பான புகைப்படம் (Credits - AP Photo)
author img

By PTI

Published : Jul 21, 2024, 5:23 PM IST

டாக்கா: வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருவதால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த மோதலில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், போராட்டத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இணைய சேவைகள் முடக்கப்பட்டதோடு, பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகள் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மூடப்பட்டுள்ளது. இதனிடையே, போராட்டத்தை முன்னிட்டு வங்கதேசத்தின் ஆளுங்கட்சி நாடு முழுவதும் கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.

1971ஆம் ஆண்டு நடந்த வங்கதேச விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. அதற்கு பல்வேறு தரப்பு எதிர்ப்புகளுக்குப் பிறகு, கடந்த 2018ஆம் ஆண்டு இந்த இடஒதுக்கீடு உத்தரவை அப்போதைய ஆளும் கட்சி ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், கடந்த ஜூன் 5ஆம் தேதி இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என அந்நாட்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அந்த வகையில், கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் வங்கதேசம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடிக்கத் தொடங்கியது.

குறிப்பாக, வங்கதேசத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடஒதுக்கீடு முறை பாரபட்சமானது, தகுதியின் அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனக் கூறி மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, வங்கதேச அரசின் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காவல்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர் தெரிவித்துள்ளார். மேலும், அங்கு வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப, இந்திய தூதரகம் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு: இந்நிலையில், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் போராட்டத்திற்கு காரணமாக இடஒதுக்கீடு குறித்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது. இது குறித்து வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், "அரசு வேலை வாய்ப்புகளில் 93 சதவீதம் மதிப்பெண் அடிப்படையிலும், மீதமுள்ள 7 சதவீதம் 1971ஆம் ஆண்டு வங்கதேச சதந்திரப் போராட்டத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் மற்ற வகுப்பினருக்கும் வழங்கப்படும்" என உத்தரவிட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “49 தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை” - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பிரத்யேக தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.