ஜெருசலேம்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. காசாவின் பெருவாரியான பகுதியை கைப்பற்றிய இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து ராபாவில் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி மக்கள் பலர் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில், காசாவை விட்டு வெளியேற முடியாததால் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
மேலும், மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் உயிர் நீத்த 94 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் சடலங்கள் குவியலாக வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவ அவசரநிலை காசா பகுதியில் ஏற்றுப்பட்டுள்ள நிலையில் போதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பினைக் கைதிகளாக மாட்டிக் கொண்ட இஸ்ரேலியர்களை மீட்பதற்காக அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் இத்தனை பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து Deir al Balah பகுதியில் உள்ள Al Aqsa மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காசாவில் ஐநா நடத்தும் பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 குழந்தைகள், 9 பெண்கள் உட்பட 40 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இதையும் படிங்க: பிரபாகரனின் பெயரைக் கூறி புலம்பெயர் தமிழ் மக்களிடம் பல லட்சம் மோசடி.. பிரபாகரனின் சகோதரர் பரபரப்பு குற்றச்சாட்டு! - Velupillai Prabhakaran