ETV Bharat / international

அபுதாபியில் இந்து கோயில்; கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி!

Abu Dhabi Hindu Temple: இஸ்லாமிய நாடான அபுதாபியில், சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலின் சிறப்பம்சங்களை குறித்து அபுதாபியில் இருந்து நேரடியாக விவரிக்கிறார், ஈடிவி பாரத் செய்தியாளர்.

அபுதாபியில் இந்து கோயில்
அபுதாபியில் இந்து கோயில்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 6:42 PM IST

Updated : Feb 9, 2024, 10:11 PM IST

அபுதாபியில் இந்து கோயில்

அபுதாபி: இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து மொழி, மதங்களைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக இந்தியர்கள் பெருமளவில் தங்கி வேலை புரிந்து வருகின்றனர். அங்கு வாழும் இந்திய இந்து மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையிலும், பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்கவும், 2015ஆம் ஆண்டு அபுதாபியில் இந்து கோயில் கட்டுவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.

அதன் அடிப்படையில், 2018ஆம் ஆண்டு அபுதாபியின் முதல் இந்து கோயில் அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 2019ஆம் ஆண்டு இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் துவங்கியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற உலக நாடுகளில் இந்து கோயில்களை நிறுவி வரும் பாப்ஸ் (BAPS) அமைப்பு, அபுதாபியில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் இக்கோயிலை கட்டி வந்தனர்.

அபுதாபி இந்து கோயில் உள்ள சிற்பங்கள்
அபுதாபி இந்து கோயில் உள்ள சிற்பங்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டப்பட்டு வரும் முதல் பாரம்பரிய இந்து கோயிலான BAPS சுவாமிநாராயண் சன்ஸ்தா கோயில், துபாய்-அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில், அபு முரைக்கா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் 32.92 மீட்டர் (108 அடி), 79.86 மீட்டர் (262 அடி) நீளம் மற்றும் 54.86 மீட்டர் (180 அடி) அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சிறந்த வேலைப்பாடுகள், நுணுக்கமான கைவினைத் திறன்கள் கொண்டு மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் கும்பாபிஷேக விழா, பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, BAPS இன் அழைப்பை ஏற்று, இவ்விழாவில் பங்கேற்று கோயிலை திறந்து வைக்க உள்ளார்.

இக்கோயிலின் கட்டுமானத்திற்காக ராஜஸ்தானில் இருந்து மணல் கற்களும், இத்தாலி நாட்டின் பளிங்கு கற்களும் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழு நாடுகள் உள்ளதால், அதைக் குறிக்கும் வகையில், இக்கோயிலில் ஏழு பிரமாண்ட கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இக்கோயிலில் கட்டப்பட்டுள்ள ஏராளமான தூண்களில் மகாபாரதம், ராமாயணம், பகவத் கீதை ஆகியவற்றின் கதைகளை விவரிக்கும் காட்சிகள், தத்ரூபமாக சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ளது என்பதை புகைப்படத்தில் நாம் காணலாம். அதேபோல், நாராயணன், சிவன், ராமர் உள்ளிட்ட 7 தெய்வங்கள் இக்கோயிலில் சிற்பங்களாக செதுக்கப்பட்டு உள்ளன என ஈடிவி பாரத் செய்தியாளர் வசந்த சித்தார்த்தன் கூறுகிறார்.

இதையும் படிங்க: உதகை அருகே மண்சரிவு; 6 பெண்கள் உயிரிழப்பு.. 4 பேர் காயம்!

Last Updated : Feb 9, 2024, 10:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.