டெல்லி : ஈரான் - இஸ்ரேல் இடையிலான மோதல் காரணமகா மத்திய கிழக்கு நாடுகள் பதற்றம் அடைந்து உள்ளன. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக கடற்பகுதியில் சென்ற இஸ்ரேல் தொடர்புடைய 'MSC Aries' சரக்கு கப்பலை ஈரான் ராணுவம் கைப்பற்றியது. இந்த சரக்கு கப்பலில் 17 இந்தியர்கள் மாலுமிகளாக பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், சரக்கு கப்பலில் சிக்கிய இந்திய மாலுமிகளை மீட்க ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சரக்கு கப்பலிலுள்ள இந்தியர்களுக்கு நிவாரணம், முன்கூட்டியே விடுதலை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தெஹ்ரான் மற்றும் டெல்லி உள்ள ஈரான் தூதரக அதிகாரிகளிடம் மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏறத்தாழ 12 நாட்களுக்கு முன்பு சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் தொடர்புடைய சரக்கு கப்பலை ஈரானிய ராணுவம் கைப்பற்றி சிறை பிடித்து உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டு இருந்த சரக்கு கப்பலை சிறை பிடித்த ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படை வீரர்கள், அதில் உள்ள இந்திய மாலுமிகள் 17 பேரையும் பினைக் கைதிகளாக பிடித்து வைத்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : கங்கனா ரனாவத்தை எதிர்த்து போட்டியிடும் விக்ரமாதித்ய சிங்! யார் இவர்? - Lok Sabha Election 2024