ETV Bharat / health

உங்களுக்கு உங்கள் மேல் அக்கறை இருக்கா?..செல்ஃப் கேர் தினம் சொல்ல வருவது என்ன? - SELF CARE TIPS

SELF CARE TIPS IN TAMIL: பிறர் மீது நீங்கள் காட்டும் அக்கறையை பாதியாவது உங்கள் மீது காட்டுங்கள் என நினைவூட்டுகிறது இந்த செல்ஃப் கேர் தினம். அதனை எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது என்ற வழிமுறைகளை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

கோப்பு படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 4:35 PM IST

சென்னை: அன்றாட வாழ்க்கையின் சலசலப்புகளுக்கு மத்தியில், உங்களுக்காக நீங்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? உங்களுக்கு பிடித்ததை நீங்கள் செய்கிறீர்களா? என்ற கேள்விகளுக்கு நம்மில் பலருக்கு பதில் கிடையாது. பொறுப்புகளையும், கடமைகளையும் தோளில் போட்டு ஓடுவதால் நமக்கு நம்மை பற்றிய சுய கவனிப்பு இல்லாமல் போய்விடுகிறது.

உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க சுய கவனிப்பு அவசியம். அப்படி, ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக இருக்கும் சுய பராமரிப்பு அல்லது சுய கவனிப்பு எனச் சொல்லக்கூடிய செல்ஃப் கேருக்கான தினம் (INTERNATIONAL SELF CARE DAY) இன்று (24.07.2024) கடைபிடிக்கப்படுகிறது. செல்ஃப் கேர் செய்வது சுயநலமாக பார்க்கப்படாமல் அத்தியாவசியமாக கருத வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

உலகளவில் இந்திய பெண்கள் தான், தங்களுக்கு பிடித்தவற்றை செய்ய முடிவெடுக்கும் போது குற்ற உணர்ச்சியை (guilty) எதிர்கொள்கிறார்கள் என்கிறது உலக சுகாதார அமைப்பு. குறிப்பாக, 88 சதவீத அமெரிக்கர்கள் செல்ஃப் கேர் செய்கின்றனர் எனவும் அதிலும், ஆண்களை விட பெண்கள் தான் தங்களை பார்த்துக் கொள்வதில் குற்ற உணர்ச்சியை சந்திக்கின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

செல்ஃப் கேரை ஆரம்பிக்க வேண்டிய அறிகுறி: எப்போதும் சோர்வாக உணர்வது, சம்பந்தம் இல்லாமல் எரிச்சல் அடைவது, செய்யும் வேலையில் கவனக் குறைபாடு, உணவு உண்ணும் முறையில் அடிக்கடி மாற்றங்கள், சமூக வாழ்வில் இருந்து விலகுவது, அதிகமாக உணர்ச்சிவசப்படுவது, எதிர்மறையான எண்ணங்கள் ஆகியவற்றை நீங்கள் எதிர்கொண்டால் உடனடியாக உங்கள் மேல் கவனம் செலுத்த ஆரம்பியுங்கள்.

என்ன தான் பிரச்னை? உடல்நலம் மற்றும் மனநலம் ஆகிய இரண்டும் இரு கண்களைப் போன்றது. நேரம் ஒதுக்கி உடற்பயிற்சியில் ஈடுபடுவது, சாப்பிடும் போதெல்லாம் கவனம் செலுத்தி சத்தான உணவுகளை சாப்பிடுவது, நம்பிக்கையான நண்பர்களிடம் பேசுவது, இயற்கையோடு நேரம் செலவிடுவது, இரவில் நிம்மதியான உறக்கம் என உங்கள் மேல் நீங்கள் செலுத்தும் அக்கறை தான் உங்களை மேம்படுத்த உதவியாக இருக்கிறது.

செல்ஃப் கேர் சாத்தியம்? எதாவது பிரச்னையா?, 'தூங்கி எந்திரி எல்லாம் சரியாயிரும்' என பலர் சொல்லி கேட்டிருப்போம், ஏன், நாம் கூட இதை மற்றவர்களுக்கு அட்வைஸாக கொடுத்திருப்போம். இப்படி எல்லா பிரச்னைகளுக்கும் தூக்கம் தான் முடிவு என்பதை நாமே உருவாக்கியதால், மாற்று வழிகள் என்ன இருக்கிறது என்று தெரியாமல் போய்விட்டது.

சமூக வலைத்தளத்திற்கு ஃப்ரேக் கொடுத்து தனியாக அல்லது இயற்கையோடு நேரத்தை செலவிடுதல், ஆன்மிகத்தில் ஈடுபடுவது, குட்டி தூக்கம் போடுவது, தியானம், மூச்சுப்பயிற்சியில் ஈடுபடுவது, தனியாக சுற்றுலா அல்லது உணவங்களுக்குச் செல்வது, டைரி எழுதுவது, பாட்டு கேட்பது, கண்களை மூடி அமைதியாக அமர்வது, சமையல், ஓவியம் வரைதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் நம் மீது கவனம் செலுத்தி நல்வழிக்கு நகர உதவுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவில் உடல் பருமன் 3 மடங்காக அதிகரிப்பு; தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொருளாதார ஆய்வறிக்கை 2023! - economic survey on obesity

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.