இந்திய சமையலறைகளில் பிரதானமாக இருக்கக்கூடிய மசாலாப் பொருட்களில் ஒன்று தான் ஏலக்காய். ஏலக்காயிற்கு இருக்கும் தனித்துவமான சுவையும், மனமும், உணவிற்கு கூடுதல் சுவையை வழங்குகிறது. அது மட்டும் ஏன், நாம் விரும்பி குடிக்கும் டீயில் இருந்து விரும்பி உண்ணும் பிரியாணி வரை பல்வேறு ரெசிபிகளில் பிரத்யேகமாக ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தினசரி 2 ஏலக்காய் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்..
ஏலக்காயில் உள்ள சத்துக்கள்: புரதம், கொழுப்பு,கால்சியம், பாஸ்பரஸ்,சோடியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் சி, நியாசின்
தினமும் 2 ஏலக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
- செரிமானத்திற்கு உதவுகிறது
- வாய் துர்நாற்றத்தை அகற்றுகிறது
- இரத்த சர்க்கரை அளவை சமன் செய்கிறது
- இரத்த அழுத்தத்தை குறைக்கிறது
- மூச்சுக்குழாய் அழற்சி பண்புகளை எதிர்க்கிறது
- இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது
- நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது
- கர்ப்ப காலத்தில் இரைப்பை குடல் கோளாறுகளை குறைக்கிறது
- வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது
- புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது
அதிகம் எடுத்துக்கொண்டால்?: பித்தப்பை, கல்லீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவற்றிற்காக சிகிச்சை எடுத்துக்கொள்வர்கள் ஏலக்காய் எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அதே போல, கர்ப்பிணிகளும் அதிகமாக ஏலக்காய் எடுத்துக்கொள்ள கூடாது. மேலும், அதிகமாக ஏலக்காய் உட்கொண்டால் சிலருக்கு வாந்தி, குமட்டல், வயிற்று வலி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்