ETV Bharat / health

சுகர் பேசண்ட்ஸ் லைட்டா மது அருந்தலாமா? எந்த அளவோடு நிறுத்த வேண்டும்? டாக்டர் அட்வைஸ்! - Can sugar patients drink alcohol - CAN SUGAR PATIENTS DRINK ALCOHOL

Can sugar patients drink alcohol: சர்க்கரை நோயாளிகள் மது அருந்தலாமா, கூடாதா? மது அருந்துவது எவ்வளவு பாதுகாப்பானது? போன்ற கேள்விகளுக்கு மருத்துவர் கூறும் பதிலை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)
author img

By ETV Bharat Health Team

Published : Sep 7, 2024, 5:17 PM IST

ஹைதராபாத்: மாறிவரும் வாழ்க்கை முறையால், பலரும் பல்வேறு நோய்களால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, உலகம் முழுவதிலும் நீரிழிவு நோயினால் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள், சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் மருந்துகளை உட்கொள்வது மட்டுமின்றி, சில உணவு விதிமுறைகளையும் பின்பற்றுகின்றனர்.

ஆனால், சில நீரிழிவு நோயாளிகள், அதான் மருந்து சாப்பிடுகிறோமே..லைட்டாக குடித்தால் எதுவும் செய்யாது என தங்கள் விருப்பப்படி உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனர். இப்படி, நீரிழிவு நோயாளிகள் குடிப்பதன் மூலம் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கிறார் மருத்துவர் மனோகர்.

இன்று இந்த தொகுப்பின் மூலம் சர்க்கரை நோயாளிகள் மது அருந்தலாமா, கூடாதா என்பதையும், மது அருந்தினால் நிரிழிவு நோயாளிகளுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? இதைப் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்வோம்.

நீரிழிவு நோயாளிகள் மது அருந்தலாமா என டாக்டர் மனோகரிடம் கேள்வி எழுப்பியதற்கு, 'சர்க்கரை நோயாளிகள் எந்த சூழ்நிலையிலும் மது அருந்தக்கூடாது' என எச்சரிக்கிறார். அதுமட்டுமல்லாமல், 'சர்க்கரை நோயாளிகள் மது அருந்துவது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதற்கு சமம்' என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

"கொஞ்சமாக மது அருந்தினால் ஒன்றும் ஆகாது, சர்க்கரை அளவு கட்டுக்குள் தான் இருக்கும்" என நீரிழிவு நோயாளிகள் நினைத்து கொண்டிருப்பது வெறும் கட்டுக்கதையே எனக்கூறும் மருத்துவர், இது ஒரு ஸ்லோ பாய்சன் என்பதை நீரிழிவு நோயாளிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

நரம்பு பாதிப்பு: மருத்துவரின் கூற்றுப்படி, "நீரிழிவு நோயாளிகள், பொதுவாகவே நரம்பு பாதிப்புக்கு ஆளாகின்றனர். இப்படியான சூழ்நிலையில், மது அருந்தினால் மேலும் பிரச்சனை மோசமாகிவிடுகிறது. அதுவும் கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்பு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். இவர்களுக்கு உடலில் காயம் ஏற்பட்டால் குணமடையும் வாய்ப்பும் மிகக் குறைவு தான். அதனால் தான், கால்விரல்கள் அகற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது" என்றார்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்தும்போது, ​​அவர்களின் இரத்த சர்க்கரை அளவு 30 சதவீதம் அதிகரிக்கும் என 2018 ஆம் ஆண்டில் 'நீரிழிவு பராமரிப்பு இதழில்' வெளியிடப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

குடிக்க விரும்பினால் என்ன செய்வது?: "எந்த சூழ்நிலையிலும், நீரிழிவு நோயாளிகள் குடிக்கக் கூடாது என்பது தான் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், அதையும் மீறி குடிப்பவர்கள், மது அருந்திய பின்னர் கண்டிப்பாக உணவு உட்கொள்ள வேண்டும் " என்கிறார் மருத்துவர்.

மேலும், "உணவுக்கு பின் கண்டிப்பாக மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் குளுக்கோஸ் அளவு குறைந்து இரத்தச் சர்க்கரைக் அளவில் வீழ்ச்சி ஏற்படலாம் என்கிறார் டாக்டர் மனோகர். இந்த நிலை ஆபத்தானது என்றும் சில சமயங்களில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

சர்க்கரை நோயாளிகள் முடிந்தவரை மதுவைத் தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர் வலியுறுத்தினார். இந்த சிக்கல்களைத் தவிர்க்க இரத்த சர்க்கரை அளவை தவறாமல் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்த விரும்பும் நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, நல்ல தூக்கம், சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்வது மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது அவசியம்.

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

இதையும் படிங்க:

இந்த 5 அறிகுறிகள் இருந்தால்..புற்றுநோய்க்கான அபாயம் என அர்த்தம்!

மாரடைப்பு வருவதை 10 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கும் அறிகுறிகள்...உஷார் மக்களே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.