நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் சமச்சீரான ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். இதற்காக, தினசரி உணவில் பல்வேறு வகையான பழங்களை சேர்த்துக்கொள்ள முயற்சிசெய்கிறோம். இப்படியான சூழ்நிலையில் வழக்கமான பழங்களுக்கு மத்தியில் 'ஸ்டோன் ஃப்ரூட்ஸ்களை' எடுத்துக்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
புற்றுநோய், இதயநோய்,உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்கள் உட்பட பல உடல்நலப் பிரச்சனைகளை தடுப்பதில் ஸ்டோன் பழங்கள் முக்கிய பங்கு வகுக்கின்றன. ஆனால், ஸ்டோன் ஃப்ரூட்ஸ்கள் என்றால் என்ன? அந்த பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன? என்பதை இந்தக் கதையில் பார்ப்போம்.
ஸ்டோன் ஃப்ரூட் என்றால்?: சில பழங்கள் மட்டும் கொட்டைகளை சுற்றி கடினமான அமைப்பை கொண்டிருக்கும். இவை தான் 'ஸ்டோன் ஃப்ரூட்' எனப்படுகிறது. ஆப்பிள், செர்ரி,மாம்பழம், ஆப்ரிகாட், பீச், பிளம்ஸ் போன்ற சில பழங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த பழங்கள் சுவை மட்டுமின்றி, ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்தும் மருத்துவ குணங்களையும் கொண்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தி: காலப்போக்கில் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் மனிதன் சூழப்படுவது இயல்பாக மாறிவிட்டது. இருப்பினும், அவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க உடலில் போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அவசியம். அதற்கு ஸ்டோன் ஃப்ரூட்ஸ் மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார் பிரபல உணவுக்கலை நிபுணர் ஸ்ரீலதா.
இந்த பழங்களில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து உடலுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.மேலும், வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கூடுதலாக, பல்வேறு வகையான நோய்த்தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகளை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் : பொதுவாக நாம் சில சமயங்களில் சோர்வு, சோம்பல் போன்ற பிரச்சனைகளால் சிரமப்படுகிறோம். அவற்றிலிருந்து நிவாரணம் பெறவும், நரம்புகள் மற்றும் தசைகளை தளர்த்தவும், ஸ்டோன் ஃப்ரூட்ஸ்களை எடுத்துக்கொள்வது சிறந்த தீர்வை தரும் என்கின்றனர் மருத்துவர்கள். முக்கியமாக பீச், பிளம் போன்ற பழங்களில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது.
எனவே இவற்றை உட்கொள்வதால் சோர்வு, சோம்பல் போன்றவை நீங்கும். அதுமட்டுமின்றி, செர்ரி பழங்களும் மற்ற ஸ்டோன் ஃப்ரூட்ஸ்களும் சேர்ந்து ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை சீராகச் செய்து இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது என்கிறார் டாக்டர் ஸ்ரீலதா.
புற்றுநோயைத் தடுக்கும் : இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறையும், உணவு முறையும்தான் பல்வேறு வகையான புற்றுநோய்களுக்குக் காரணம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், பரம்பரையாக சிலருக்கு இந்தப் பிரச்சனைகள் வரக்கூடிய அபாயம் உள்ளது என கூறப்படுகிறது. எனவே புற்றுநோய் வராமல் தடுக்க ஸ்டோன் ஃப்ரூட்ஸ்களை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.
இந்த வகை பழங்களில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் செல்களை சேதமடையாமல் பாதுகாக்கின்றன. இதன் விளைவாக, புற்றுநோய் அச்சுறுத்தலை பெரிய அளவில் தவிர்க்கலாம் என்கிறார் மருத்துவர். மேலும், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் (என்ஐஎச்) ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில், ஸ்டோன் ஃப்ரூட்ஸ்களில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை கண்டறிந்துள்ளது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்