ETV Bharat / health

கர்ப்ப கால ஸ்ட்ரெச் மார்க்குகள்? கவலைய விடுங்க...நச்சுனு 5 இயற்கை வைத்தியம் உங்களுக்காக! - Pregnancy stretch marks oils

author img

By ETV Bharat Health Team

Published : 2 hours ago

pregnancy stretch mark home remedy: கர்ப்ப காலத்தில் தோன்று ஸ்ட்ரெச் மார்க்குகளை நீங்கள் முற்றிலுமாகத் தடுக்க முடியாது என்றாலும் அது உண்டாவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கலாம். அதற்கான இயற்கை வழிகள் என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள் இந்த செய்தி தொகுப்பில்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (CREDIT - ETV BHARAT)

கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு இடமளிக்கும் வகையில் வயிறு பெரிதாகும் போது தோல் நீண்டு ஸ்ட்ரெச் மார்க்குகள் உருவாகின்றன. இந்த தழும்புகள் வயிறு மட்டுமின்று, மார்பகங்கள், தொடைகள்,கைகளில் கூட தோன்றுகின்றன. இதை முற்றிலுமாகத் தடுக்க முடியாது என்றாலும், சில குறிப்புகளை பின்பற்றுவதால் அதன் தோற்றத்தை குறைக்கலாம். அது எப்படி? என்பதை பற்றி பார்க்கலாம்...

தேங்காய் எண்ணெய்: பொதுவாகவே, விர்ஜின் தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை நாம் பெற முடியும். கர்ப்பிணிகள், தேங்காய் எண்ணெயை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, சிறுது நேரம் மசாஜ் செய்து நீரால் கழுவினால் நாள்பட தழும்புகள் மறையும் வாய்ப்புகள் உள்ளன.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் (CREDIT - ETV Bharat)

பாதாம் எண்ணெய்: தினமும் பாதாம் எண்ணெயில் வயிற்று பகுதியை மசாஜ் செய்வதால் தழுப்புகள் மறைய உதவியாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பாதாம் எண்ணெயுடன் சம அளவு சர்க்கரை எடுத்து இரண்டையும் ஒன்றாக கலக்கி, தழும்புகள் உள்ள இடத்தில் மெதுவாக தேய்க்க வேண்டும். பின்னர், சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் தமும்புகள் மெல்ல மெல்ல மறைகின்றன. வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதை செய்து வரும் போது நல்ல மாற்றத்தை காண முடியும்.

பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய் (CREDIT - ETV Bharat)

கற்றாழை ஜெல்: சரும பராமரிப்பில் கற்றாலை ஜெல் முக்கிய பங்கு வகுக்கிறது. கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் அல்லது பிரசவித்த கர்ப்பிணிகள் தினமும் குளித்த பின்னர் தழும்புகள் உள்ள இடத்தில் தடவி வரும் போது தழும்புகள் மறைகின்றன

கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் (CREDIT - ETV Bharat)

விளக்கெண்ணெய்: பிரசவத்தின் போது ஏற்படும் தழும்புகள் மற்றும் தசை விரிவு கோடுகளை நீக்கும் தன்மையை கொண்டது விளக்கெண்ணெய். இந்த எண்ணெய்யை தழும்புகள் உள்ள அடிவயிறு, தோள்பட்டை, முட்டி மேல் பகுதி உள்ளிட்ட இடங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் எளிதில் மறையும்

விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் (CREDIT - ETV Bharat)

பாடி ப்ரஷ்: ப்ரஷ் கொண்டு உடலை தேய்த்து குளிக்கும் போது உடல் உறுப்புகள் எல்லாவற்றிற்கும் இரத்தம் சீராக பாய்கிறது. சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் நச்சுக்களை வியர்வை சுரப்பியின் வழியாக வெளியேற்றி சருமத்திற்கு புத்துயிர் வழங்குகிறது. இதனால், தழும்புகள் இல்லாமல் இருக்க உதவுகிறது.

பாடி ப்ரஷ்
பாடி ப்ரஷ் (CREDIT - ETV Bharat)

இதையும் படிங்க:

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் எடை அதிகரிப்பு.. ஆய்வு முடிவு சொல்வது என்ன?

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? கூடாதா? தம்பதிகளின் சந்தேகத்திற்கு, நிபுணர்களின் பதில் இங்கே.!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (CREDIT - ETV Bharat TamilNadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.