ETV Bharat / health

புற்றுநோய் முதல் ஆன்டி ஏஜிங் வரை..தினமும் 1 மாதுளையால் தீரும் 10 பிரச்சனைகள்..சர்வதேச ஆய்வில் முக்கிய தகவல்! - Pomegranate benefits - POMEGRANATE BENEFITS

pomegranate benefits: சரும ஆரோக்கியம் முதல் புற்றுநோய் செல்கள் உற்பத்தியை தடுப்பது வரை தினமும் ஒரு மாதுளை பழம் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்....

கோப்புப்படம்
கோப்புப்படம் (CREDIT - GETTY IMAGES)
author img

By ETV Bharat Health Team

Published : Sep 16, 2024, 4:31 PM IST

ஹைதராபாத்: நமது பகுதிகளில் இயல்பாக விளையக்கூடிய மாதுளையின் பழம், பூ, இலை என எல்லாமே மருத்துவ குணங்களை கொண்டது தான். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூனுவகை சுவைகளை கொண்ட மாதுளை செரிமானத்தை மேம்படுத்துவது முதல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. இப்படி, மாதுளையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகளை என்னென்ன என்பதை பார்க்கலாம்..

மாதுளையில் உள்ள சத்துக்கள்:

  • வைட்டமின் சி,கே
  • பொட்டாசியம்
  • இரும்புச்சத்து
  • புரதச்சத்து
  • மக்னீசியம்
  • நார்ச்சத்து

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த மாதுளையை அனைவரும் ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் மற்றும் இதை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்..

இருதயத்திற்கு நல்லது: அதிக இரத்த அழுத்தம் மற்றும் இருதய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு மாதுளை பழத்தை சாப்பிட்டுவதால், உடலில் உள்ள நைட்ரிக் அமிலத்தை அதிகரித்து, இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதனால், இருதயம் ஆரோக்கியமாகவும், இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.

சர்க்கரை நோயை தடுக்கும்: டைப் 2 நீரிழிவு நோயை எதிர்க்கும் பண்புகள் மாதுளைக்கு அதிகம். நாட்டு மாதுளையை சர்க்கரைப் நோயாளிகள் சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல், பரம்பரை ரீதியாக வரக்கூடிய சர்க்கரை நோயை தடுக்கும் ஆற்றல் உள்ளது.

இரத்தச்சோகை குணமாகும்: மாதுளையில் இரத்த உற்பத்திக்கு தேவையான ஃபோலேட் (Folate) மற்றும் இரும்புச்சத்து வளமான அளவில் நிறைந்துள்ளது. பொதுவாக, உடம்பில் இரும்புச்சத்து குறையும் போது தான் இரத்தச்சோகை உருவாகிறது. ஆகையால், இரத்தச்சோகையால் பாதிக்கப்படுபவர்கள் காலையில், வெறும் வயிற்றில் மாதுளை பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்தம் அதிகரிக்கிறது.

சரும ஆரோக்கியம்: மாதுளையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது. தினமும் இதை சாப்பிடுவதால், இதில் உள்ள ஆன்டி ஏஜிங் (AntiAgeing) பண்புகள் முதுமையை தாமதப்படுத்துகிறது. மேலும், புது செல்களை உருவாக்கி சரும சுருக்கம் மற்றும் சரும தொற்று நோய்கள் வராமல் தடுக்கிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பற்கள் ஆரோக்கியம்: மாதுளையில் உள்ள தனித்துவமான பண்புகள் பற்களில் சொத்தை ஏற்படாமல் தடுக்கிறது. இதனால், பற்கள் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்கிறது.

செரிமானம்: மாதுளையில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து உள்ளதால், இதனை தினமும் எடுத்துக்கொள்ளும் போதும் செரிமானம் மண்டலம் சீராக இயங்குவதோடு செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளையும் தடுக்கிறது.

புற்றுநோய் வராமல் தடுக்கும்: புற்றுநோய் கட்டிகள், மார்பகம், புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate cancer) போன்ற அனைத்து வகையான புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த மாதுளைக்கு இருக்கிறது. முக்கியமாக, தினமும் மாதுளையை சாப்பிட்டு வருவதால் புற்றுநோய் செல்களின் உற்பத்தியை மட்டுப்படுத்துகிறது என நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஞாபக சக்தி அதிகரிக்கும் : தினமும் மாதுளை சாப்பிடுவதால் இயற்கையாகவே மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் தனது சக்தியை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. அல்ஸைமர் (Alzheimer) போன்ற நோய்களை வராமலும் தடுக்கிறது.

பெண்களுக்கு நல்லது: கருவுறுதலில் பிரச்சனை இருந்தால் தினமும் காலை வெறும் வயிற்றில் இதனை சாப்பிட்டு வர ஹார்மோன் குறைபாடு நீங்கி கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கிறது. மேலும், மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறத்த மருந்தாக இருக்கிறது.

இதையும் படிங்க:

  1. நீரிழிவு நோயாளிகள் அத்திப்பழத்தை 'இப்படி' சாப்பிடுங்கள்..!
  2. தொங்கும் தொப்பை-ஐ குறைக்க வெள்ளை பூசணி ஜூஸ்..எப்படி குடிக்கணும் தெரியுமா?

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.