ETV Bharat / health

இந்த டின்னர் சாப்பிட்டால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்! குக்கிங் கூட ஈசி தான்.. - DINNER RECIPES FOR WEIGHT LOSS

author img

By ETV Bharat Health Team

Published : Aug 22, 2024, 4:20 PM IST

DINNER IDEAS IN TAMIL: இரவு உணவிற்கு சத்தான மற்றும் எளிமையான உணவுகளைச் செய்ய ஆலோசனை தேடிக் கொண்டிருந்தால், இந்தப் பதிவு உங்களுக்குத் தான்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - GETTY IMAGES)

சென்னை: மதியம் சாப்பிடும் உணவை விட இரவில் லைட்டான, எளிதில் ஜீரணிக்க கூடிய உணவை சாப்பிட வேண்டும். அதற்கு தான் நம் முன்னோர்கள், 'காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு, மதியம் சேவகனைப் போல் சாப்பிடு, இரவில் பிச்சைக்காரனைப் போல் சாப்பிடு' எனச் சொல்லி வைத்தற்கான அர்த்தம்.

கல்லூரி, வேலையை முடித்து விட்டு இரவு உணவுக்கு என்ன செய்வது என்று இனி யோசிக்காமல், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை தினமும் செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடை குறைவதை நீங்கள் பார்க்கலாம்.

சூப்: சூப் வகைகளை இரவு உணவாக எடுத்துக்கொள்ளும் போது, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவியாக இருக்கிறது. பருப்பு சூப், நிறைய காய்கறிகளை போட்டு வெஜிடபிள் சூப், சிக்கன் சூப் என இரவு உணவை சூப்புடன் முடித்துக் கொள்வதால் பசியின்மை போவதோடு, உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடுகிறது.

வெஜிடபிள் பிரைட் ரைஸ்: பிரைடு ரைஸ் மீது அனைவருக்கும் தனிக்காதல் இருக்கும். கடைகளில் பிரைடு ரைஸ் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, உங்களுக்கு பிடித்தமான கேரட், பட்டானி, பீன்ஸ், கோஸ் ஆகிய காய்கறிகளை அதிகமாக பயன்படுத்தி வீட்டிலேயே பிரைடு ரைஸ் செய்து சாப்பிடுங்கள். இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.

சிறுதானிய உப்புமா: சாமை, தினை, வரகு, குதிரைவாலி, குயனோவா ஆகிய தானியங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது. வீட்டில் தயாரிக்கப்படும் இந்த உப்புமா வகைகளோடு, உங்களுக்குப் பிடித்த சில காய்கறிகளை சேர்த்து செய்தால் சத்தான ருசியான சூப்பர் உணவு ரெடி.

அவித்து சாப்பிடும் உணவுகள்: இரவு உணவில் எண்ணெய் அதிகமாக சேர்க்காமல் இருப்பது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இட்லி, இடியாப்பம், புட்டு, சர்க்கரைவள்ளி கிழங்கு, கொழுக்கட்டை போன்ற உணவுகளை உட்கொள்வதால் எளிதல் ஜீரணம் நடந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

போகா: சுவையானது மட்டுமல்லாமல், சமைக்கவும் எளிமையான உணவு அவல் (போகா எனவும் அழைக்கப்படுகிறது). இதில் குறைவான கலோரி இருப்பதால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது. இரும்புச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் பலருக்கு வரப்பிரசாதமாக அமைகிறது. இதில் பிடித்தமான காய்கறிகளைச் சேர்த்து சாப்பிடும் போது பல நோய்களுக்கு மருந்தாகவும் மாறுகிறது.

ரொட்டி வகைகள்: கோதுமை, ராகி, சோளம் போன்ற மாவுகளில் செய்யப்படும் ரொட்டிகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனை இரவு உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் நடு இரவில் பசி எடுப்பதை தவிர்த்து நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்குகிறது.

இரவு உணவு உண்பது எவ்வளவு முக்கியமோ, அதே நேரத்தில் எத்தனை மணிக்கு சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். அதிகபட்சமாக இரவு 8 மணிக்குள் உணவருந்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அதிக பலன் கிடைக்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்)

இதையும் படிங்க: இனி இடுப்பு வலிக்கு சொல்லுங்க பை-பை...சுவையான உளுந்து களி செய்வது எப்படி? - HOW TO MAKE ULUNDHU KALI

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.