ETV Bharat / health

மார்பக புற்றுநோய் மாதம்; இந்நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? - causes of breast Cancer - CAUSES OF BREAST CANCER

மார்பக புற்றுநோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.

கோப்பு படம்
கோப்பு படம் (Credits - Getty Images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 9:35 PM IST

சென்னை: உலகளவில் பெண்களில் மார்பக புற்றுநோய் மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2.1 மில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். தோராயமாக 0.5 முதல் 1 சதவீதம் புற்றுநோய் ஆண்களுக்கு ஏற்படுகின்றன. கடந்த 2022இல் உலகளவில் 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் மார்பக புற்றுநோயால் உயிரிழந்துள்ளதாகவும், 2.3 மில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO - World Health Organisation) கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 4 சதவீதம் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் சர்வதேச மார்பக புற்றுநோய் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதம் சர்வதேச மார்பக புற்றுநோய் மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1985ஆம் ஆண்டில் முதல் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது.

1993ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்கான அடையாளமாக இளஞ்சிவப்பு நிற ரிப்பனை (Pink ribbon) தேர்ந்தெடுத்தது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை முன்னிலைப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி துறைமுகப் பாலம் ( Sydney's Harbour Bridge), கனடாவில் உள்ள நயகரா நீர்வீழ்ச்சி (Niagara Falls in Canada), ஜப்பானில் உள்ள டோக்கியோ கோபுரம் (Tokyo Tower in Japan) ஆகிய இடங்கள் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வுகளுக்காக இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டப்படும்.

கோப்பு படம்
கோப்பு படம் (Credits - Getty Images)

மார்பக புற்றுநோய்: மார்பகத்தில் உள்ள செல்கள், கட்டுப்பாடு இன்றி பெருகும் நிலையில் புற்றுநோய் கட்டி ஏற்படுகிறது. கட்டுக்குள் வைக்கப்படாவிட்டால் கட்டிகள் உடல் முழுவதும் பரவி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

இதையும் படிங்க

இந்தியாவில் அதிகரிக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு.. ஆய்வில் வெளிவந்த உயிர்வாழ்வு விகிதம்!

மார்பக புற்றுநோய் பரம்பரை பரம்பரையாக வருமா? சர்வதேச ஆய்வு சொல்வதென்ன? - REASON FOR BREAST CANCER

மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • 30 வயதுக்கு மேல் முதல் பிரசவம்
  • கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வது
  • கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணுதல்
  • மது அருந்துதல்
  • உடல் பருமன்
  • புகைபிடித்தல்
  • கதிர்வீச்சு பாதிப்பு
  • மரபணு
  • முதல் கர்ப்பத்தின் போது வயது
  • பூப்பெய்தும் வயது போன்றவைகளால் மார்பக புற்றுநோய் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அறிகுறிகள்:

  • மார்பகம் அல்லது அக்குளில் கட்டி, வலி இல்லாமல் இருப்பது.
  • மார்பக தோலில் எரிச்சல்.
  • மார்பகத்தின் ஒரு பகுதி தடித்தல் அல்லது வீங்கியிருப்பது.
  • மார்பகம் அல்லது முலைக்காம்பு வடிவத்தில் மாற்றம்.
  • முலைக்காம்புகளில் இருந்து திரவம் கசிதல்.
  • மார்பக தோல் மற்றும் முலைக்காம்பு சிவத்தல்.

மார்பக புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள்:

  • மார்பகங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.
  • 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மேமோகிராபி (Mammography) செய்து கொள்வது நல்லது.
  • மேமோகிராபி என்பது மார்பக புற்றுநோயை கண்டறிய எக்ஸ் கதிர்களை பயன்படுத்தும் ஒரு ஸ்கிரீனிங் சோதனை ஆகும்.
  • உடல் எடையை பராமரிக்க வேண்டும்.
  • ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.
  • மது மற்றும் புகையிலை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
  • தாய்மார்கள் முடிந்தவரை குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்க வேண்டும்.
  • தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.