சென்னை: கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிரீஸில் உள்ள க்ரீட்டின் நாசோஸின் மன்னரான மினோஸ் என்பவர் உடலுறவு கொண்ட பிறகுத் தனது மனைவிகள் இறந்துபோனதாகவும், இதனால் அதில் இருந்து அவர்களைப் பாதுகாக்க ஆட்டின் சிறுநீர்ப்பையைக் கருத்தடைக்காகப் பயன்படுத்தியதாகவும் வரலாறுகள் குறிப்பிடுகின்றன.
மேலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாலியல் காரணமாக சிஃபிலிஸ் என்ற நோய் மக்களிடம் பரவிய நிலையில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், இதற்குப் பாதிக்கப்படும் நபர்களின் உடல் முழுவதும் தடிப்புகள் ஏற்படுவதுடன் கல்லீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த அன்றைய மன்னர்கள் மேற்கொண்ட நடவடிக்கைதான் ஆணுறை பயன்பாடு என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஆணுறையைக் கண்டுபிடித்த மருத்துவரின் பெயர் காண்டோம்.
இந்த ஆணுறைகள் விலங்குகள், அதிலும் குறிப்பாக ஆட்டின் சிறுநீர்ப்பை, குடல் உள்ளிட்டவைகளை வைத்து உருவாக்கிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சில்க், பாலித்தின், பிளாஸ்டிக் எனப் பல முன்னேற்றங்களைக் கண்ட ஆணுறைகள் தற்போது பாதுகாப்பு என்ற வரையறையைக் கடந்து முழுக்க முழுக்க வியாபார நோக்கமாக மாறி இருக்கிறது.
உடலுறவில் ஏற்படும் இன்பத்தை அடிப்படையாகக் கொண்டு விளம்பரப்படுத்தப்படும் ஆணுறைகளை மக்கள் வாங்கி பயன்படுத்துகிறார்கள். பயன்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை, ஆனால் புரிதல் என்பது அது பாதுகாப்பிற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, இன்பத்திற்கானதாக மட்டும் இருக்கக்கூடாது என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.
ஆணுறை பயன்பாட்டால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன? ரப்பர் லேடக்ஸ் ஆணுறைகள் உள்ளிட்ட பல ஆணுறைகளைப் பயன்படுத்தி உடலுறவு கொள்ளும்போது, பெண்களின் பிறப்பு உறுப்பின் உள்பகுதி அதிகமாக உரசப்பட்டு பிறப்புறுப்பு புற்றுநோய், கர்ப்பப்பை புற்று நோய் உள்ளிட்ட அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் ஆர்கானிக் காண்டம் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள உடலுறவு தொடர்பான ஷாப்களில் இது விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆட்டின் குடல் பகுதியை வைத்துத் தயாரிக்கப்படும் இந்த ஆர்கானிக் காண்டம்கள் இந்திய விலைப் படி சுமார் 2 முதல் 3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆண்களை விட பெண்கள் தான் அதில் ஆர்வம் உள்ளவர்கள்.. ஆய்வு கூறுவது என்ன? - Sexual Feelings Men Vs Women