ETV Bharat / health

ஓடி விளையாடு பாப்பா! அதில் அறிவியலும் அறிந்து கொள் பாப்பா! - UNICEF சொல்லும் ரகசியம் - UNICEF ON SCIENCE IN CHILDREN GAMES

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 4:05 PM IST

SCIENCE BEHIND CHILDREN GAMES: குழந்தைகளை விளையாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களது அறிவு , மனம், சமுதாய பிணைப்பு, படைப்பாற்றல் என அனைத்து கோணத்திலும் அவர்கள் வளர்ச்சி அடைவதாக UNICEF மற்றும் லெகோ அறக்கட்டளை மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன, இது குறித்த சுவாரசியமான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஓடி விளையாடு பாப்பா எனப் பாரதி கூறிய கூற்றுக்கு பின் இத்தனை காரணங்களா? என வியக்க வைக்கும் அறிவியல் பயன்களை ஆராய்ந்து தொகுத்து கொடுத்திருக்கிறது யூனிசெஃப் மற்றும் லெகோ அறக்கட்டளை. ஆம் முந்தைய காலத்தில் ஓடியாடி விளையாடப்பட்ட நொண்டி, பச்ச குதிரை, மரம் ஏறுதல் போன்ற விளையாட்டுகள் இன்றைக்கு கைக்குள் அடங்கிய மோபைல் போன் விளையாடுகளாக மாறுவதனால் எத்தனை அறிவியல் நிறைந்த வளர்ச்சியை உங்கள் குழந்தைகள் இழக்கிறார்களா என தெரியுமா. இதுகுறித்து UNICEF தரும் விளையாட்டுகளின் அறிவியல் பின்புலங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

விளையாட்டும் அறிவுத்திறனும்: குழந்தைகளின் முதல் மூன்று ஆண்டுகளில் அடையப்படும் மூளை வளர்ச்சிதான் அவர்களின் சிந்தனை ஆற்றலின் அடிப்படையாக உள்ளது. அப்படிபட்ட பொன்னான காலத்தில் பெற்றோராகிய நீங்கள் உங்கள் குழந்தைக்கு முதல் ஆசிரியர் மற்றும் முதல் நண்பராக இருக்க வேண்டும். அதற்கு அவர்களுடன் சேர்ந்து விளையாடும் பழக்கத்தை உருவாக்குங்கள்.

பில்டிங் பிளாக்ஸும் அறிவாற்றலும்: பில்டிங் பிளாக்ஸ் அடுக்கி விளையாடுவதன் மூலம் குழந்தைகள் பொருட்களை கையில் வைத்து உணர்கிறார்கள். தனது மூளையில் காட்சிப்படுத்தி எந்த பகுதி பளாக்ஸ் எங்கு சேரும் என சிந்தித்து பளாக்ஸ்களை பொறுத்துகிறார்கள். இதில் அவர்கள் இடஞ்சார்ந்த புரிதலை கற்று கொள்கிறார்கள். மேலும் உரிய பிளாக்ஸை பொறுத்த முடியாமல் இருக்கும் போது வரும் கோபம் அவர்களுக்குள் விடாமுயற்சி பண்பை வளரச்செய்கிறது, மேலும் பிளாக்ஸ்களை வைத்து உயரமாக அடுக்குவது மனதளவில் உயர்ந்த சிந்தனைக்கு விருப்பம் வரச்செய்கிறது. இது குழந்தைகளின் முகபாவனையை வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தருகிறது.

கண்ணாமூச்சியும் மன உறுதியும்: ஒரு பொருளை மறைத்து வைத்துவிட்டு அதை உங்கள் குழந்தைகளைத் தேட விடுங்கள். அப்போது அவர்களின் அறிவாற்றல் வளர்வதுடன் கவனம் செலுத்தும் பழக்கத்தை கற்றுக்கொள்வார்கள். மேலும் ஒரு பொருள் தொலைந்து போகும் போது கையாள வேண்டிய மனப்பக்குவத்தை குழந்தைகள் அடைகின்றனர். அதுமட்டுமின்றி தொலைந்தது மீண்டும் கிடைக்கும் போது அடையும் நிம்மதி அவர்களை, எந்த நேரத்திலும் விரக்தியடையாமல் இருப்பது, எந்த ஒரு சிக்கலுக்கும் தீர்வு தேடும் பண்பு உள்ளவர்களாக வளர செய்கிறது. மேலும் விளையாட்டில் துப்புக் கொடுங்கள் அது அவர்களை புதிய கோணத்தில் ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது.

ஒலி மூலம் சமுக திறன்: பொதுவாக குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை வெளிபடுத்தும் மொழியாக ஒலியெழுப்புவர். பேச நினைப்பதை தங்களின் முகபாவங்கள் மற்றும் சைகைகள் மூலம் தொடர்பு கொள்வதை பெற்றோர்கள் வரவேற்க வேண்டும். அதற்கு தங்கள் மொழியில் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தைகளின் நரம்பியல் இணைப்புகள் தகவல் தொடர்பு மற்றும் சமூக திறன்களுக்கு பழகச்செய்கிறது. பெற்றோர் குழந்தையிடமும், குழந்தை பெற்றோரிடமும் பேசி கொள்ளும் இந்த பயிற்சி இருவரின் மனதையும் இணைக்கிறது.

ஆட்டம் பாட்டமும் உணர்ச்சி வெளிபாடும்: குழந்தைகள் பாடும்போதும் நடனமாடும்போதும் உணர்ச்சித் திறன் வளர்கிறது. ஒரு பாட்டை பாடும் போதும், ஆடும் போதும் குழந்தைகள் சுய விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் சிறப்பாக செயல்பட முனைப்பதுடன், நிர்வகித்தல், தங்களை கட்டுப்படுத்துதல் போன்ற பண்புகளை வளர்த்துக்கொள்கின்றனர். இந்த பயிற்சி குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த பழக்கமாகிறது. மேலும் இது அவர்களுக்குகென மனநிம்மதியை தருவதனால் இது ஒரு பிணைப்பு நடவடிக்கையாக மாறி அவர்களை அந்த களத்தில் வெற்றி அடைய செய்கிறது.

படம் வரைந்தால் படைப்பாற்றல் வளரும்: குழந்தைகள் காகிதங்களில் கிறுக்கும் போதும், படங்கள் வரையும் போதும் கற்பனை செய்கின்றனர். இதனால் அவர்களுக்கு படைப்புத் திறன் உருவாகிறது. குழந்தைகள் வரையும் போது தங்களுகென சொந்தமான உலகத்தை உருவாக்கி படமாக்கிக் கொள்கின்றனர். பின்னர் வரைந்து முடித்தவுடன் அவர்கள் உருவாக்கிய உலகில் பெற்றோர்களை அழைத்துச் செல்கின்றனர். இது குழந்தைகளின் விருப்பத்தின்படி அவர்கள் இந்த சமுதாயத்தில் வாழும் துணிச்சலைத் தருகிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் விளையாட்டுகள் மூலம் குழந்தைகளின் கற்பனைத்திறன், தீர்வு காணுதல், விடா முயற்சி போன்ற வாழ்க்கை திறன்களைக் கற்றுக்கொள்வதாக ஆய்வு கூறியுள்ளது.

இதையும் படிங்க: பட்ஜெட் குடும்பத்தின் ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு- இதை செய்றீங்களா நீங்க?..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.