ETV Bharat / health

மணல் ஈக்கள் பரவும் சண்டிபுரா வைரஸ்.. தொற்றில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி? - prevention of Chandipura Virus - PREVENTION OF CHANDIPURA VIRUS

prevention of Chandipura Virus: கடந்த 2 வாரங்களில் 6 குழந்தைகள் சண்டிபுரா வைரஸால் உயிரிழந்துள்ள நிலையில், இந்நோய் பாதிப்பு வராமல் தற்காத்துகொள்ளும் முறை குறித்து ரேலா மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் வேல்முருகன் கூறியதை இத்தொகுப்பில் காணலாம்.

வைரஸ் கோப்பு படம், மருத்துவர் வேல்முருகன்
வைரஸ் கோப்பு படம், மருத்துவர் வேல்முருகன் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 2:48 PM IST

சென்னை: இந்தியாவில் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வரும் சண்டிபுரா வைரஸால் (Chandipura vesiculovirus) குஜராத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். குழந்தைகளிடத்தில் மணல் ஈக்கள் (Sandfly) மூலம் பரவும் இந்நோய் 24 முதல் 48 மணி நேரத்தில் மரணத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்த சண்டிபுரா வைரஸ் தொற்று புதியவகை வைரஸ் அல்ல. ஏற்கனவே, 14 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டதுள்ளது குறிப்பிடத்தக்கது. அதைவிட முதன்முதலில் 1965ஆம் ஆண்டு மகாராஷ்டிரா, நாக்பூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள சில பழங்குடியினக் கிராமத்தைச் சேர்ந்த 17 உயிர்களை பறித்துள்ளது. ஆனால், இந்த வைரஸ் தொற்றை தவிர்க்கும் விதமாக மணல் ஈயை விரட்டும் பொருட்கள் வைத்து அவற்றை விரட்டிய நிலையில், வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக கூறப்படுகிறது.

குழந்தைகள் நல மருத்துவர் வேல்முருகன் (Credits - ETV Bharat Tamil Nadu)

எப்படி பரவுகிறது: இந்நோய் குறித்து ரேலா மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் வேல்முருகன் கூறுகையில், "சண்டிபுரா வைரஸால் குஜராத்தில் 6 குழந்தைகள் இறந்துள்ளனர். ராப்பிடோவைரிடே (Rhabdoviridae) என்ற வைரஸ் மூலமாக இந்நோய் பரவுகிறது. அதாவது மணல் ஈக்கள் என்னும் பூச்சிகளின் கடியால் இந்நோய் ஏற்படுகிறது. இந்நோய் 9 மாத குழந்தை முதல் இருந்து 15 வயது வரை குழந்தைகளை அதிகம் தாக்குகிறது.

அறிகுறிகள்: ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, வாந்தி, நீரிழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். அதன் பின் வலிப்பு ஏற்பட்டு குழந்தைகளின் உடல் நலன் மோசமடையலாம்.

தடுப்பதற்கான வழிகள்:

  • மணல் ஈக்கள் குழந்தைகளை கடிக்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் குழந்தைகளுக்கு முழுக்கை சட்டைகளை அணிந்து விட வேண்டும்.
  • குழந்தைகளுக்கு நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்ட உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஏனெனில் காலையில் லேசான காய்ச்சல் ஏற்பட்டு, இரவு குழந்தையின் உடல் மிகவும் மோசமடையலாம். ஆகவே லேசான காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்வது அவசியம்.
  • தமிழகத்தில் சண்டிபுரா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு தான். இருப்பினும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: நோய்களை கண்டறிய இனி சிறுநீர் பரிசோதனை தேவையில்லை! இதிலும் புகுந்த செயற்கை நுண்ணறிவு! - AMRX Software

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.