ETV Bharat / health

தண்டுவட மரப்பு நோயால் ஏற்படும் விளைவுகள்.. விளக்குகிறார் நரம்பியல் மருத்துவர் ஸ்ரீவித்யா! - World multiple sclerosis day2024 - WORLD MULTIPLE SCLEROSIS DAY2024

World Multiple Sclerosis Day2024: தண்டுவட மரப்பு நோய் என்பது என்ன?, இந்நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதன் அறிகுறிகள் குறித்து சென்னை ரேலா மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் ஸ்ரீவித்யா கூறுவதை இத்தொகுப்பில் காணலாம்.

கோப்பு படம், மருத்துவர் ஸ்ரீவித்யா
கோப்பு படம், மருத்துவர் ஸ்ரீவித்யா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 3:13 PM IST

Updated : May 30, 2024, 3:37 PM IST

சென்னை: ஆண்டுதோறும் மே மாதம் 30ஆம் தேதி ‘மல்டிபிள் ஸ்களீரோசிஸ் தினம்’ (Multiple Sclerosis Day) அதாவது "தண்டுவட மரப்பு நோய் தினம்" கடைப்பிடிக்கப்படுகிறது. இது World MS Day என்றும் அழைக்கப்படுகிறது. தண்டுவட மரப்பு நோய் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கடைபிடிக்கப்படுகிறது. ‘தண்டுவட மரப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவரின் ஆதரவும், குடும்பத்தினரின் ஆதரவும் இருக்கும் பட்சத்தில் இந்த நோயை எளிதாக வென்று விடலாம்’ என்பதே இந்த வருட தண்டுவட மரப்பு நோய் தினத்திற்கான கருப்பொருளாகும்.

நரம்பியல் மருத்துவர் ஸ்ரீவித்யா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தண்டுவட மரப்பு நோய் நரம்புகளுக்கு சேதம் மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும். இதன் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடலாம். இந்த அறிகுறிகள் கடுமையாகும் பொழுது நோயாளியால் நடக்க முடியாமல் போகலாம். தண்டுவட மரப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதன் அறிகுறிகளை விளக்குகிறார் சென்னை ரேலா மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் ஸ்ரீவித்யா.

தண்டுவட மரப்பு நோய்: இது குறித்து அவர் கூறியதாவது, “தண்டுவட மரப்பு நோய், ஆட்டோ இம்யூன் சிஎன்எஸ் டிமைலினேட்டிங் நோய் (Autoimmune CNS demyelinating disease) என்றும் அழைக்கப்படுகிறது. இதில் ஆட்டோ இம்யூன் என்பது, நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தி என்பது, நமக்கு சாதகமாக இல்லாமல், எதிராக செயல்படும் நிலையை குறிக்கிறது. அதாவது நாம் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படும் போது வெளியில் இருந்து வரும் கிருமிகள் அல்லது வைரஸ்கள் நமது உடலை தாக்கும்.

அப்போது அந்த கிருமிகளை, நமது உடலில் உள்ள இரத்த வெள்ளையணுக்கள் மற்றும் சிவப்பணுக்கள் தாக்கும். இது தான் இயல்பு. ஆனால் ஆட்டோ இம்யூன் ஏற்பட்டால். நமது வெள்ளையணுக்கள் மற்றும் சிவப்பணுக்கள் நமது உடலில் உள்ள நல்ல திசுக்களை தாக்கும். எளிதாக சொல்ல வேண்டுமானால், நமது நோயெதிர்ப்பு மண்டலமே நமக்கு எதிராக செயல்படுவதாகும். டிமைலினேட்டிங் (demyelinating) என்பது நமது நரம்பு செல்களை சுற்றியுள்ள உடலுக்கு அவசிமான மையலின் (Myelin) என்ற உறை முற்றிலுமாக அழிந்து போவதைக் குறிக்கிறது.

எதனால் ஏற்படுகிறது: நமது நோயெதிர்ப்பு மண்டலம், மையலின் என்ற நரம்பு செல் உறையை தாக்குவதால் தண்டுவட மரப்பு நோய் ஏற்படுகிறது. இது முக்கியமாக மூளையையும், முதுகு தண்டுவட பகுதியையும் தான் அதிகமாக தாக்கும். இளம் வயதினரை அதிகமாக தாக்குகிறது. ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

நோயின் வகைகள்: இந்த நோய் Relapsing Form of the disease, Progressive Form of the disease என இரு வகைப்படும். Relapsing Form of disease என்பது நோய் தொடர்ந்து வராமல், விட்டு விட்டு வருவதைக் குறிக்கிறது. இந்நோய் பாதிக்கப்பட்டவருக்கு இந்நோயின் அறிகுறிகள் சில நாட்கள் அல்லது ஒரு வாரம் இருக்கலாம். மருந்து எடுத்துக்கொண்டதும் சரியாகலாம். சிலருக்கு மருந்து கொடுக்காமலே, தானாக சரியாகும். அதன் பின் சில நாட்கள் இடைவெளிக்கு பின் மீண்டும் ஏற்படலாம்.

இந்த பிரச்சினை இருப்பவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை. இது தான் தானாக சரியாகி விடுகிறதே என்று மருத்துவரை அணுக மாட்டார்கள். அது தவறு. அப்படி அசாட்டாக விடுவதால் தான் நோயை கண்டறிய தாமதமாகிறது. 66 சதவீதத்திற்கு அதிகமானோர் Relapsing Form நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சில பேர் மட்டுமே Progressive Form நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

நோயின் அறிகுறிகள்: திடீரென ஒரு கண்ணோ அல்லது இரு கண்களோ தெரியாது. அதன் பின் 4 அல்லது 3 நாட்களோ கழித்து மீண்டும் அதுவாகவே சரியாகும். திடீரென கால்கள் மரத்து போகும். கால்கள் நடக்க முடியாமல் போகும். சிறுநீர் கழிப்பதிலும், மலம் கழிப்பதிலும் பிரச்சினைகள் ஏற்படலாம். தலைவலி ஏற்படலாம்.

அதிகமானோர் கால்கள் மரத்து போகும் பிரச்சினையை சந்திக்கின்றனர். இதற்காக ஒவ்வொரு முறையும் கை, கால்கள் மரத்து போவதை தண்டுவட மரப்பு நோய் என்று கூற முடியாது. ஆகவே பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், அருகில் உள்ள நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

சிகிச்சை: இந்நோய்க்கான சிகிச்சை குறித்து பேசிய அவர், “நோயெதிர்ப்பு மண்டலம் தான் பிரச்சினை என்பதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை சரி செய்யக்கூடிய இம்யூனோ மாடுலேட்டர் (immunomodulatory drugs) இன்யூனோ சப்ரசஸ் (Immunosuppressant) மருந்துகளே பரிந்துரைக்கப்படுகின்றன. இது ஒரு கடுமையான நோய். ஆனால் குணப்படுத்தக்கூடிய நோயாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மூளையைத் தின்னும் கொடிய நோய்.. மீண்டு வர வழியில்லையா?- மருத்துவர் கூறுவது என்ன? - Amoebic Brain Fever Disease

Last Updated : May 30, 2024, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.