சென்னை: உலக சுகாதார நிறுவனம் (WHO) இன்று (ஆகஸ்ட் 13) குரங்கு அம்மை பாதிப்பு குறித்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டின் ஜூன் 30 வரை 27 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால், இந்த எண்ணிக்கையை குறைவாக மதிப்பிடுவது எதிர்காலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகளை உலக நாடுகளின் குரங்கு அம்மை நோய் பாதிப்பை வைத்து அளவிட வேண்டும். அப்போதுதான் இந்த நோயின் தீவிரத்தை உணர முடியும் என்கின்றனர். தற்போது நாம் ஜூன் 2024-இல் ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பை மட்டும் கருத்தில் கொண்டால், ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட 26 நாடுகளில் 934 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் நான்கு பேர் குரங்கு அம்மையால் உயிரிழந்துள்ளதாக அறிவித்திருக்கிறது.
ஆய்வின் தரவுகள்: "ஜூன் 2024-இல் பதிவான நோய் பாதிப்புகளின் எண்ணிக்கையை, அதிகமான நோய் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளின் வரிசையில் பார்த்தால், ஆப்பிரிக்கா (567 - 61%), அமெரிக்கா (175 - 19%), ஐரோப்பியா (100 11%), மேற்கு பசிபிக் (81) மற்றும் தென்-கிழக்கு ஆசியா (11). மேலும், இந்த தரவுகள் குறித்து WHO கூறும்போது, இந்த எண்ணிக்கையானது, குறைந்த அளவிலான பாதிப்பாக இருப்பதாக இருக்கலாம், ஆனால் உண்மையில், பல நாடுகளில் இந்த நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வும், பதிவு செய்யும் அளவிற்கு தெரியப்படாத நோயாக இருக்கிறது.
உலக அளவில் நோய் பாதிப்பு தரவுகள்: இந்த ஆய்வானது அனைத்து நாடுகள் மற்றும் தீவுகளில் உள்ள 1,162 பகுதிகளில் நடத்தப்பட்டது. இதில் 2022 ஜனவரி 1 முதல் 2024 ஜூன் 30 வரை மொத்தம் 99,176 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு, 208 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே அனைத்து நாடுகளும் குரங்கு அம்மை நோயின் தீவிரத்தை உணர்ந்து, இந்த நோயை ஒரு அறிவிக்கப்பட்ட நோயாக கருதி கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர்.
மேலும், இந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடாத நாடுகளில் குரங்கு அம்மை நோய் இல்லை என முடிவாகவில்லை. ஏனென்றால், இந்த நாடுகள் நோய் பாதிப்பு குறித்து புகாரளிக்காத காரணத்தால், நோய் பாதிப்பு குறித்து அறியப்படாமல் உள்ளது என ஆய்வு கூறுகிறது.
ஆய்வில் கண்டறிப்பட்டவை: இந்த ஆய்வின்படி உலகளவில் 96.4 சதவீதம், அதாவது 90,410 நோய் பாதிப்பில் 87,189 பேர் ஆண்களாகவும், அதில் சராசரியாக 34 வயதுக்குள் இருப்பவர்களாக இருக்கின்றனர். இதில் குறிப்பாக, ஆப்பிரிக்கா நாட்டில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுள் 79.4 சதவீதம் 18 - 44 வயதுடைய ஆண்களாக இருக்கின்றனர்.
இந்த நோய் பாதிப்பு பாலியல் தொடர்பு மூலம் அதிகளவில் பரவுவதாக ஆய்வு கூறுகிறது. அதாவது, 22,801 நோய் தொற்று வழக்குகளில் 19,102 வழக்குகள் பாலியல் தொடர்பினால் பரவப்பட்டது. இவை மொத்த நோய் பதிப்பில் 83.8 சதவீதம் பாலியல் தொடர்பினால் மட்டும் குரங்கு அம்மை நோய்க்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
மேலும், பாலியல் அற்று நேரடி அல்லது மறைமுக தொடர்புகளால் ஏற்பட்ட 505 நோயாளிகளுள் 483 நோயாளிகள் பாதிக்கபடுவதாகவும், அவை மொத்தமாக 95.6 சதவிதமாக இருக்கிறதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த நோயானது மனிதன் -மனிதன் தொடுதல் மூலம் அதிகப்படியாக பரவும் பாதிப்பு உள்ளது. இதில் ஆப்பிரிக்கா அதிக பாதிப்புடைய நாடாக உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மனஅழுத்தத்திலிருந்து மனிதனை விடுவிக்குமா இசை? - ஆய்வில் வெளிவந்த அசத்தலான தகவல்!