ETV Bharat / health

ஸ்கின்-ஐ பளபளப்பாக்க சமந்தா செய்யும் விஷயம்..'ரெட் லைட் தெரபி' அனைவருக்கும் சாத்தியமா? - SAMANTHA SKIN CARE - SAMANTHA SKIN CARE

Samantha red light therapy routine: நடிகை சமந்தா, தனது ஸ்கின் கேருக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட்ஸ்களை சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். அதில், ரெட் லைட் தெரபி செய்வதாக அவர் கூறியிருப்பது என்ன? அந்த தெரபி மேற்கொள்வதால் ஸ்கின் எப்போது இளமையாக இருக்குமா? என்பதை தெரிந்து கொள்ளலாம்..

ACTRESS SAMANTHA
ACTRESS SAMANTHA (Credits- Samantha Insta page)
author img

By ETV Bharat Health Team

Published : Sep 17, 2024, 11:57 AM IST

ஹைதராபாத்: நடிகைகளுக்கு மட்டும் எப்படி முகம் க்ளியராகவும், பளபளப்பாகவும் இருக்கிறது என நாம் பலமுறை நினைத்து ஆச்சரியப்பட்டிருப்போம். இதற்கு காரணம் மேக்கப் என பலரும் சொல்லி கேட்டிருப்ப்போம். ஆனால், அது தான் இல்லை. மேக்கப் என்பதற்கும் சருமப் பராமரிப்பு என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

சருமம் ஆரோக்கியமாக இருந்தாலே முகம் க்ளியராகவும் பளபளப்பாகும் ஜொலிக்கும். இதற்கு தான், அனைவரும் கட்டாயமாக ஸ்கின் கேரை பின்பற்ற வேண்டும் என பலரும் அறிவுறுத்துகின்றன. "சரும ஆரோக்கியம் என்பது அழகு மட்டுமல்ல; இது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாகும்" என சமீபத்தில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதோடு, தனது முகம் பளபளப்புக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட்ஸ்களை தனது 'டே இன் மை லைப்' வீடியோவில் வெளிப்படையாக கூறியிருந்தார். அதில், சரும பளபளப்புக்கு ரெட் லைட் தெரபி (Red Light Therapy) மேற்கொள்வதாக அவர் கூறியிருப்பது என்ன? அதை செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்..

ரெட் லைட் தெரபி (RTL) என்றால் என்ன?: மனிதனின் சருமத்தின் மேல் தோன்றும் தழும்புகள், சுருக்கங்கள், முகப்பரு போன்றவற்றை சரி செய்து முகம் மற்றும் உடல் அழகை மேம்படுத்த உதவும் ஒரு சிகிச்சை முறை தான் இந்த ரெட் லைட் தெரபி. இதில் குறைந்த அளவு சிவப்பு ஒளியை பயன்படுத்துகின்றன.

இது, முகம் பராமரிப்பிற்கு மட்டும் தானா? என்றால் இல்லை. இந்த தெரபி, முழு உடல் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகின்றன. குறிபிட்ட பகுதிகளை குறி வைக்க கையடக்க சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எதையெல்லாம் சரி செய்யும்?

  • மூட்டு வலி பிரச்னைகள்
  • இரத்த ஓட்டம் அதிகரிப்பு
  • காயங்களை ஆற்றுதல்
  • நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்
  • தைராய்டு ஹார்மோன்களை சமநிலையில் வைத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது

எப்போதும் இளமையாக இருக்க முடியுமா?: உங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்கள், தழும்புகள், கோடுகளை குறைத்து சருமத்திற்கு தேவையான ஊக்கத்தை கொடுக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால், முதுமையால் ஏற்படும் சரும பிரச்சனையை தடுக்கிறது.

முடி வளர்ச்சி?: இந்த சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம், உச்சந்தலையில் ஒளி ஊடுருவி இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, நுண்ணறைகளுக்கு (follicles) ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனையும் வழங்குகிறது. இதனால் முடி வளர்ச்சி சீராக நடைபெறுகிறது.

முகப்பருவில் இருந்து தீர்வு: இந்த சிகிச்சை முறை, கொலாஜன் (Collagen) உற்பத்தியைத் தூண்டுகிறது. கரும்புள்ளிகளை குறைக்கவும், முக அமைப்பையும் மேம்படுத்துகிறது.

இதை செய்தால் முகம் பளபளக்குமா?: இது தவிர, சில அடிப்படைகள் விஷயங்களை பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் நடிகை சமந்தா. அவை,

  1. சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு
  2. ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது
  3. உடல் உள்ளேயும் வெளியேயும் நீரேற்றமாக வைக்க வேண்டும் என பகிர்ந்த சமந்தா,"எனது தோல் பராமரிப்பு பின்னால் இருக்கும் ரகசியம் இது தான்" எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு செலவாகும்?: இந்த சிகிச்சையின் விலை சுமார் ரூ.3000 முதல் ரூ.5000 வரை என வேறுபடுகிறது. இந்த முறையை நீங்கள் பெற விரும்பினால், அதற்கு முன்னதாக ஒரு மருத்துவரை அணுகி கலந்தோசிக்க வேண்டும். குறைந்த ஒளியே இந்த சிகிச்சையில் பயன்படுத்தினாலும், உங்கள் சருமத்தை நீண்ட நேரம் ஒளிக்கதிர்களுக்கு வெளிப்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

இதையும் படிங்க:

  1. how to look younger: என்றும் இளமையாக தோற்றம் அளிக்க வேண்டுமா.? அப்ப உங்களுக்கு இதுதான் பெஸ்ட்.!
  2. கொரியன் ஸ்கின் டோன் வேண்டுமா.? அரிசி கழுவின தண்ணீர்தான் தீர்வு.!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.