தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட பின் நடத்தப்பட்ட முதல் மாநில மாநாட்டில் கட்சி தலைவர் விஜயின் துறுதுறு பேச்சும் நடையும் எங்கும் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், 50 வயதிலும் விஜய் ஃபிட்டாகவும் இளமை மாறா துள்ளலுடன் இருப்பது பலரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது.
தமிழ் திரையுலகில் டாப் நடிகராக வலம் வரும் விஜய், தனது சினிமா பாதையை முழுவதுமாக மாற்றி முழு நேர அரசியலில் களமிறங்கியுள்ளார். 'என் கரியரின் உச்சத்தை, ஊதியத்தை உதறி விட்டு உங்களுக்காக வந்து இருக்கேன்' என விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக-வின் முதல் மாநாட்டில், கட்சி தலைவர் விஜய் பேசியது அனைவரையும் புல்லரிக்க செய்துள்ளது.
800மீ ரேம் வாகில் தொடங்கி, 48 நிமிடங்கள் விடாமல் மாநாட்டில் பேசியது, விஜயின் அரசியல் ஆர்வத்தை ஒரு புறம் வெளிப்படையாக காட்டினாலும் மற்றொரு புறம் விஜயின் ஃபிட்னஸ் மீது பலரது கண்கள் திரும்பியுள்ளது. இந்தாண்டு ஜூன் மாதத்தில் தனது 50வது வயதிற்குள் விஜய் அடி எடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில் விஜய்: 40 வயதை கடந்தாலே தோல் சுருங்குவது, தொப்பை போடுவது, தசைகள் தளர்வது போன்றவை இயற்கையாவகே நடக்கும். ஆனால், நடிகர் விஜய் இன்றும் தனது கட்டு மஸ்தான உடம்பை பராமரித்து, இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார். மாநாட்டில், விஜயின் ரேம் வாக் நடை இதற்கு சிறந்த உதாரணம் என்றே சொல்லலாம். 800 மீ ரேம்ப் வாக்கில், ஓடுவது, தொண்டர்கள் தூக்கி எறிந்த கட்சி துண்டுகளை லாவாக பிடிப்பது, விஜயை பார்த்த பூரிப்பில் தொண்டர் ஒருவர் தூக்கி எறிந்த செல்போனை குனிந்து எடுப்பது என இளவட்டத்தை போல துறுதுறுவென இருந்தார்.
விஜயின் பிட்னஸ் ரகசியம்?: இந்த அளவிற்கு விஜய் தன் உடலை எப்படி பராமரித்து கொள்கிறார்? என்ன சாப்பிடுகிறார்? அவர் செய்யும் உடற்பயிற்சிகள் என்னென்ன? எனபதை தெரிந்து கொள்ள இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உணவில் கட்டுப்பாடு: ஒருவர் தனது உடலை பராமரித்து கொள்ள டயட், உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அதை எல்லாம் தாண்டி சுய ஒழுக்கத்துடன் இருப்பது மிகவும் அவசியம் என்பதை அனைவரும் அறிந்திருக்க கூடும். இப்படி இருக்க, விஜய் உணவு முறையில் சுய ஒழுக்கத்துடன் இருப்பார் என கூறப்படுகிறது. 'படப்பிடிப்பின் போது, நான் சமைத்து எடுத்து செல்லும் உணவை கூட, டயட் காரணமாக சாப்பிடமாட்டார். ஆசைக்காக ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்வார்' என்கிறார் நடிகர் விஜயின் தயார் சோபனா.
நேரத்திற்கு உணவு: அதே போல, விஜய் தினசரி சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்வதை பழக்கமாக வைத்துள்ளார் என்கிறார் நடிகர் மகேந்திரன்.பசித்தால் மட்டும் சாப்பிடுவது, தேவைக்கு மட்டும் சாப்பிடுவது விஜயின் முக்கிய பிட்னஸ் காரணியாக இருக்கிறது. அதே போல, விஜய் உடற் பயிற்சிகளில் கவனம் செலுத்துவதை விட உணவில் தான் கட்டுப்பாடாக இருப்பார் என்கிறார் விஜயின் பிட்னஸ் டிரெய்னர் பரத் ராஜ்.
வெயிட் லிப்டிங்: இரவில் சீக்கிரமாக சாப்பிட்டு, நடைபயிற்சி செய்வார் எனவும், வெயிட் லிப்டிங் போன்ற கடுமையான உடற்பயிற்சியை விஜய் விரும்ப மாட்டார் என கூறப்படுகிறது. கார்டியோ, ஜம்பிங் ஜாக்ஸ் போன்றவற்றை அவர் செய்வதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, இட்லி, பொங்கல், தோசை, பூரி போன்ற எளிமையான உணவுகளையே காலை அல்லது இரவு நேர உணவாக எடுத்துக்கொள்வார் என்கிறார் விஜய் தாயார்.
இதையும் படிங்க: 2026-ல் த.வெ.க. சின்னம் என்ன? விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் |
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்