சென்னை: நாம் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீர், பால், நெய், எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள் என சந்தையில் கிடைக்கும் அனைத்து உணவுப் பொருட்களிலும் கலப்படம் செய்யப்படுவது தற்போது மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது. இது சிறு பிரச்னைகளில் தொடங்கி பெரும் ஆபத்தாக முடிகிறது. எனவே, அதன் மோசமான விளைவுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.
நாம் உண்ணும் உணவில் கலப்படம் உள்ளதா? என்பதை அறிய சில டிப்ஸ்களைப் பின்பற்றினால், உணவில் கலப்படம் உள்ளதா? இலையா? என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மிளகு கலப்படமா? இல்லையா? என்பதை எப்படி அறிவது? என்பது குறித்து 'இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்' (FSSAI) கூறுவதை இந்தத் தொகுப்பில் காணலாம்.
FSSAI நடவடிக்கை: உணவுப் பொருட்களில் உள்ள கலப்படத்தை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். உணவில் உள்ள கலப்படங்களைக் கண்டறிய FSSAI சில குறிப்புகளை வெளியிடுகிறது. 'உணவில் கலப்படம் கண்டறிதல்’ (Detecting food adulteration) என்ற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் சில வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இவற்றின் மூலம் நாம் உட்கொள்ளும் உணவுகள் நல்லதா? போலியா? என்பதைக் கண்டறியலாம்.
Detecting Blackberries Adulteration in Black Pepper#DetectingFoodAdulterants_9#AzadiKaAmritMahotsav@jagograhakjago @mygovindia @MIB_India @PIB_India @MoHFW_INDIA pic.twitter.com/0hQHrLrS1z
— FSSAI (@fssaiindia) October 6, 2021
இதையும் படிங்க: சப்பாத்தி சூப்பர் சாப்டாக வர மாவை இப்படி பிசைந்து பாருங்க..அசந்து போய்ருவீங்க!
கருப்பு மிளகில் கலப்படம்: கருப்பு மிளகு மசாலாப் பொருட்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை முறைக்கான பாரம்பரிய வழிகாட்டியாகும். இது உடலின் உள் வெப்பத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்நிலையில், மிளகு தேவைக்கு ஆதரவாக வியாபாரிகள் அதில் காய்ந்த பிளாக்பெர்ரி மற்றும் பப்பாளி விதைகளை சேர்க்கின்றனர்.
கலப்படத்தைக் கண்டறிதல்: கருப்பு மிளகில் பிளாக்பெரி கலப்படம் உள்ளதைக் கண்டறிவது குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளது.
செய்முறை 1: கருப்பு மிளகை எடுத்து ஒரு மேஜையில் வைத்து உங்கள் விரலால் மிளகை அழுத்தி பார்க்கவும். கலப்படமில்லாத மிளகுகள் எளிதில் உடைந்து போகாது. கலப்படம் செய்யப்பட்ட மிளகுகள் எளிதில் உடைந்துவிடும்
செய்முறை 2: கண்ணாடி டம்ப்ளரில் தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் சிறிதளவு கருப்பு மிளகை போடவும். எடை காரணமாக கலப்படமில்லாத மிளகு தண்ணீரின் மூழ்கிவிடும். பப்பாளி விதைகள் தண்ணீரில் மிதக்கும்.
பொறுப்புத் துறப்பு: மேற்குறிப்பிட்ட அனைத்து சுகாதார தகவல்களும் உங்களது புரிதலுக்காக மட்டும். அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்