ஹைதராபாத்: ட்ரிப் போலாமா? என்றால் போது 'ஐ'ம் ரெடி என ஒரு கூட்டமே ஒரு பக்கம் நின்றால்..மறுபுறம், 'அய்யயோ டிராவலா, எனக்கு வாந்தி வருமே' என புலம்பும் ஒருவரோ இருவரோ நமது கூட்டத்தில் கண்டிப்பாக இருப்பார்கள்.எவ்வளவு குதூகலமான பயணமாக இருந்தாலும் சரி, இவர்களின் இந்த உடல்நிலை பிரச்சனை அவர்களை சங்கடப்படுத்திவிடுகிறது.
இதற்கான காரணம் என்ன? இதை தடுப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? தீர்வுகள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள் இந்த செய்தி தொகுப்பில்,..
பயணத்தின் போது வாந்தி வரக் காரணம்?: பயணத்தின் போது, நமது உள் காது உணர்வது ஒன்றாகவும், பார்க்கும் காட்சிகள் வேறொன்றாகவும் இருப்பதால் வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, நாம் பயணம் செய்யும் போது அதை நமது கண்கள் பதிவு செய்து, நாம் நகரும் செய்தியை மூளைக்கு அனுப்புகிறது.
அதே போல, நாம் அசையாமல் அமர்ந்திருப்பதை நமது உள் காது உணர்ந்து, இந்த செய்தியையும் மூளைக்கு அனுப்புகிறது. இப்போது, இரண்டு செயல்களால் வரும் முரண்பாட்டை மூளை சரியாகக் செயல்படுத்த முடியாததால் வாந்தி, தலைசுற்றல், குமட்டல் ஏற்படுகின்றன.
இதை எடுத்துச்செல்லுங்கள்:
இஞ்சி: பயணத்தின் போது வாந்தி, குமட்டல், தலைசுற்றல் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் ஒரு சிறு துண்டு இஞ்சி அல்லது இஞ்சி மிட்டாயை எடுத்துக்கொள்வது சிறந்தது. பொதுவாகவே, இஞ்சி டீ குடிப்பதால் தலைசுற்றல் பிரச்சனையும் குறைகிறது என்கிறார் பொதுநல மருத்துவர் பூஜிதா
ஏலக்காய்: பயணத்தின் போது ஏலக்காயை மென்று சாப்பிடும் போது வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் வராது.
துளசி: பயணத்தின் போது வாந்தி வரும் என நினைப்பவர்கள் துளசி இலைகளை எடுத்துச்செல்வது சிறந்த தீர்வு. இரண்டு அல்லது மூன்று துளசி இலைகள் மெல்லுவதால் இந்த பிரச்சனை நீங்கும்.
மோஷன் சிக்னஸ்-ஐ தவிர்க்க மேலும் சில டிப்ஸ்கள்:
- பயணத்தின் போது வாந்தி எடுப்பவர்கள்,பயணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக எண்ணெய் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
- கார் அல்லது பேருந்தின் முன்புறத்தில் அமருங்கள்
- ஜன்னல் இருக்கையை தேர்வு செய்வது சிறந்தது
- பார்வையை ஒருமுகப்படுத்தும் செயல்களான ஃபோனைப் பார்ப்பது மட்டும் படிப்பதை தவிர்க்கவும்
- உங்களுக்கு பிடித்த இசையை கேளுங்கள்
- வாகனத்தில் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்யுங்கள்
- பயணத்திற்கு முன் அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்ல யோசனையல்ல
- தூங்கிவிடுங்கள்
- பயணத்திற்கு முன் அல்லது பயணத்தின் போது அளவான உணவை உட்கொள்ளுங்கள்
- இஞ்சி,புளிப்பு மிட்டாய்களை வைத்துக்கொள்ளுங்கள்
இதையும் படிங்க:
- மெஹந்தி செக்க சிவப்பாக பிடிக்க வேண்டுமா? மறக்காமல் கையில் 'இதை' தடவுங்கள்!
- உங்கள் கிச்சனில் கரப்பான் பூச்சிகள் ஓடி விளையாடுகிறதா? 'இதை' தெளித்தால் மீண்டும் வரவே வராது..!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்