சென்னை: சுவைக்காகச் சாப்பிடும் பலரும் அதில் ஆரோக்கியம் உள்ளதா? என்பதை நினைவில் கொள்வதில்லை. இதனால் உங்கள் உள் உடல் நலன் மட்டும் அல்ல வெளிப்புற அழகும் பாதிக்கப்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிலும் குறிப்பாக முகம் மற்றும் சருமத்தின் தோல் சுருங்கிப் போகுதல் பலரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது.
சரி இந்த தோல் சுருக்கத்தைச் சரி செய்யச் சந்தைகளில் விற்கப்படும் அழகு பராமரிப்புப் பொருட்கள் போதாதா என நீங்கள் கேட்கலாம். ஆனால் அதை விடச் சிறந்தது நீங்கள் வீட்டில் மேற்கொள்ளும் சில வாழ்வியல் நடைமுறைகள் தான் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த வகையில் தோல் சுருக்கம் நீங்கவும், தோல் சுருக்கம் இளமையில் வராமல் தடுப்பதற்கும் என்ன செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.
1. முதலில் தண்ணீர் நன்றாகக் குடிக்க வேண்டும்: என்ன எதற்கெடுத்தாலும் தண்ணீர் என்று நினைக்கிறீர்களா? ஆம் தண்ணீரை அவ்வளவு சாதாரணமாக நினைத்துவிட முடியாது. உடலில் உள்ள 90%-க்கும் மேற்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் முதல் தீர்வு தண்ணீராக மட்டும்தான் இருக்கிறது. நீங்கள் தண்ணீரை அடிக்கடி வாயில் நிரப்பி வைத்து விழுங்குவதன் மூலம் உங்கள் சருமத்திற்குத் தேவையான நீரேற்றம் கிடைக்கிறது.
2. பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுதல்: உங்கள் அன்றாட வாழ்கையில் பச்சைக் காய்கறிகள், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் சருமத்திற்குத் தேவையான வைட்டமின் மற்றும் மினரல்ஸை வழங்கி பாதுகாக்கிறது. தோல் பளபளப்புப் பெறத் தேவையான அனைத்து சத்துக்களையும் வழங்குகிறது.
3. அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்: அன்றாடம் குறைந்தது 20 நிமிடமாவது உடற்பயிற்சி மற்றும் யோகா மேற்கொள்ளுதல். இது உங்களைப் புத்துணர்ச்சியுடன் வைப்பது மட்டும் இன்றி, உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களையும் சுவாசிக்கச் செய்யும். இதனால் உங்கள் சருமம் புதுப்பொலிவு பெறும்.
4. முகச் சுருக்கம் நீங்க ஹோம் ரெமடி: ஒரு ஸ்பூன் மில்க் க்ரீம் மற்றும் அதனுடன் அரை ஸ்பூன் சுத்தமான மஞ்சள் சேர்த்துக் கலந்து முகத்திற்கு அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் அதை உலர விட்டு, அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவி, மென்மையான காட்டன் துணியால் முகத்தை மிருதுவாக துடைக்கவும்.
மற்றொன்று, ஒரு ஸ்பூன் அவக்காடோ பேஸ்ட் மற்றும் அதில் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். இதையும் சுமார் 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட்டுக் குளிர்ந்த தண்ணீரில் கழுவித்துடைக்கவும்.
இந்த இரண்டு வகையான ஹோம் ரெமடிகளையுமே உங்கள் முகம் மட்டும் இன்றி கழுத்து மற்றும் கைப்பகுதிகளிலும் போடலாம். இதை நீங்கள் வாரத்திற்கு ஒன்றோ அல்லது இரண்டோ முறைகள் பின்பற்றினால் போதும். உங்கள் தோல் சுருக்கங்கள் விரைவில் சரியாகிவிடும்.
இதையும் படிங்க: கொரியன் ஸ்கின் டோன் வேண்டுமா.? அரிசி கழுவின தண்ணீர்தான் தீர்வு.! - Rice Water For Hair And Skin Care