ETV Bharat / health

மூளை கட்டி இருந்தால் அதை எவ்வாறு தெரிந்து கொள்வது? மருத்துவரின் வழிகாட்டுதல்! - world brain tumor day 2024

world brain tumor day 2024: உலக மூளை கட்டி தினம் ஜூன் 8ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் நிலையில், இது குறித்து விளக்குகிறார் சென்னை ரேலா மருத்துவமனையின் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் அன்பு செல்வம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit: Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 6:01 AM IST

சென்னை: ஆண்டுதோறும் ஜூன் 8ஆம் தேதி உலக மூளைக்கட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கத்திலும், தீங்கு விளைவிக்கும் மூளைக்கட்டியை நோக்கி உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்கும், இந்நோய் தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதையும், மருந்துகளை கண்டறிவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், மூளை கட்டி (Brain Tumor) என்றால் என்ன? அதன் அறிகுறிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சென்னை ரேலா மருத்துவமனையின் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் அன்பு செல்வம் விளக்கம் அளித்துள்ளார். அதை பார்க்கலாம்.

மூளை கட்டி என்றால் என்ன?: மூளையின் செல்களில் இருந்து ஒரு கட்டி உருவாகி அது காலப்போக்கில் பெரிய கட்டியாக மாறலாம். இந்த கட்டி சில நேரங்களில் தீங்கற்ற கட்டியாக (benign tumor) இருக்கலாம். அல்லது வீரியம் மிக்க கட்டி அதாவது புற்றுக்கட்டியாகவும் (malignant tumor) இருக்கலாம். இது தவிர உடலின் மற்ற பாகங்களில்.. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் நுரையீரலில் இருந்தோ, மார்பகத்தில் இருந்தோ அல்லது தாய்ராய்டிலோ புற்று நோய் உருவாகி அது மூளை வரை சென்று மூளை கட்டியை (Brain Tumor) உருவாக்கலாம். அதை மெட்டாஸ்டேடிக் கட்டி (metastatic tumor) என மருத்துவ மொழியில் கூறுவார்கள்.

மூளை கட்டி யார் யாரை பாதிக்கும்?: இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும். பாதிக்கப்படும் நபருக்கு தலைவலி, வாந்தி, வலிப்பு மற்றும் உடல் சோர்வோ இருக்கலாம். சில நேரங்களில் அறிகுறிகள் மிக குறைவாகவும் இருக்கும். சிலருக்கு பேச்சில் குளரல், நினைவாற்றல் இழப்பு, நடத்தையில் மாற்றம் உள்ளிட்ட சில அறிகுறிகள் இருக்கலாம்.

நோய் அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?: முன் கூறியது போன்ற அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அனுகி ஆலோசனை பெற வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே நோயின் தன்மை குறித்து கண்டறியப்படும் பட்சத்தில், அறுவை சிகிச்சை, கீமோ தெரப்பி உள்ளிட்ட பல சிகிச்சை முறைகளால் நோயாளியை முழுமையாக குணப்படுத்த முடியும். ஆனால் நோயின் தீவிரம் அதிகரித்த பின் மருத்துவரை அனுகும் பட்சத்தில் அதை குணப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கும்.

சிகிச்சையை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?: முதலில் ஒரு நபருக்கு மூளை கட்டி இருக்கிறது என்பது தெரிந்த உடன் இதற்கான முழுமையான சிகிச்சைகளாக கருதப்படும் ரேடியோ தெரப்பி, கீமோ தெரப்பி, அறுவை சிகிச்சை போன்ற அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கப்பெரும் வகையிலான சென்டர்களை அனுகி அங்கே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மூளை கட்டி வருவதை தடுக்க முடியுமா?: இதை தடுப்பது மிகவும் அரிதான விஷயம். காரணம் இது மரபணுவால் வருகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் வருகிறதா? என்பதை கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் அறிகுறி ஆரம்ப கட்டத்தில் இருக்கும்போதே சிகிச்சை மேற்கொள்வது மட்டுமே தீர்வு. மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பேணுவது இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க உதவும். புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம் ஆகியவற்றை கைவிட வேண்டும். சத்தான உணவு முறை, சரியான உறக்கம், உடற்பயிற்சி போன்றவைகளை மேற்கொள்வதும் சிறந்தது.

இதையும் படிங்க: Rdn சிகிச்சை மூலம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம்: அப்பல்லோ மருத்துவர்கள் கூறுவது என்ன? - Rdn Therapy Control High Bp

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.