சென்னை: நீளமான, அடர்த்தியான கூந்தலுக்கு ஆசைப்படாதவர்கள் உண்டா? கூந்தல் ஒருவரின் அழகை மேம்படுத்துவதால் தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. ஆனால் இன்றைய சூழல் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, முறையற்ற பராமரிப்பு, ஆரோக்கியமற்ற உணவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு, பொடுகு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இதற்குத் தீர்வு காண நீங்கள் என்னதான் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து எண்ணெய்களை வாங்கி தேய்த்தாலும், சிகிச்சைகள் மேற்கொண்டாலும் அது முற்றிலும் பலன் அளிக்காது. முழுமையான பராமரிப்பு, சரியான வாழ்க்கை முறையும் கட்டாயம். அதனுடன் கூடவே, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஹேர் டானிக்கையும் சேர்த்துப் பயன்படுத்திப் பாருங்கள் குறைந்தது 30 நாட்களில் இருந்து மெல்ல மெல்ல அதற்கான ரிசல்ட் தெரிய வரும்.
ஹேர் டானிக் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:
- வெந்தயம் : 3 டீ ஸ்பூன்
- கருஞ்சீரகம் : 3 டீ ஸ்பூன்
- தேயிலை : 2 டீ ஸ்பூன்
- கருவேப்பிலை : 4 கொத்து
- இஞ்சி : ஒரு இஞ்ச் துண்டு இடித்தது
- சின்ன வெங்காயத்தின் தோல் : சிறிய கப்பில் ஒரு கப்
செய்முறை: சுத்தமான பாத்திரம் ஒன்றில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வையுங்கள். பிறகு அந்த தண்ணீரில் வெந்தயம் 3 டீ ஸ்பூன், கருஞ்சீரகம் 3 டீ ஸ்பூன், தேயிலை 2 டீ ஸ்பூன், கருவேப்பிலை 4 கொத்து, அதனுடன் இஞ்சி ஒரு இஞ்ச் துண்டு இடித்தது, மற்றும் சின்ன வெங்காயத்தின் தோல் சிறிய கப்பில் ஒரு கப், இவற்றை எல்லாம் மொத்தமாகப் போடுங்கள். மீடியம் ஃப்ளேமில் வைத்து நன்றாக வேக வையுங்கள். குறைந்தது 20 நிமிடம் கழிந்து அடுப்பை ஆஃப் செய்துவிடுங்கள். அந்த தண்ணீரை நன்றாக ஆற வைத்து ஸ்ப்ரேயர் பாட்டில் ஒன்றில் வடிகட்டி ஊற்றி வையுங்கள்.
உபையோகப்படுத்தும் முறை: நீங்கள் குளிக்க செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவோ அல்லது இரவு உறங்கச் செல்வதற்கு முன்போ இந்த ஹேர் டானிக்கை உங்கள் முடியின் வேர்களில் படும்படி ஸ்ப்ரே செய்து கொடுங்கள். அதை அப்படியே விட்டு விட்டு லைட்டான ஷாம்பு மூலம் தலை முழுவதுமாக கழுவிக்கொள்ளுங்கள். பிறகு முடியை டவல் மூலம் மெதுவாக துடைத்து உலர வையுங்கள். இதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும்போது உங்கள் தலை முடியின் வேர்கள் தூண்டப்பட்டு கூந்தல் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.
இதையும் படிங்க: தல தோனிக்கு புடிச்ச Diet Chart என்ன தெரியுமா? - MS Dhoni Favourite Food And Diet