- வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழ சாறு: எலுமிச்சை பழ சாறு கலந்த வெதுவெதுப்பான நீர் வயிற்றின் pH அளவை சமநிலைப்படுத்துவதோடு செரிமானத்திற்கு உதவியாக இருக்கிறது. அதனால், வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழ சாறு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர அசிடிட்டி பிரச்சனை நீங்கும்.
- சோம்பு: வயிற்றின் அமிலத்தன்மையை குறைப்பதோடு செரிமானத்தை ஊக்குவிக்க சோம்பு உதவியாக இருக்கும். வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் சோம்பு விதைகளை மெல்லுங்கள் அல்லது சோம்பு டீ போட்டு குடித்தால் அசிடிட்டி பிரச்சனைக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- இஞ்சி டீ: இஞ்சி டீ, வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை நடுநிலையாக்கி குமட்டல் மற்றும் வயிற்று உப்புசத்தை குறைப்பதன் மூலம் வயிற்றை அமைதியடைய செய்கிறது. ப்ரஸான இஞ்சி துண்டுகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டு குடித்து அசிடிட்டியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
- குளிர்ந்த பால்: காய்ச்சாத பால் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை உடனடியாக நடுநிலையாக்குகிறது. அந்த வகையில், காலையில் அசிடிட்டி பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் வெறும் வயிற்றில் ஒரு சிறிய கிளாஸ் குளிர்ச்சியான குறைந்த கொழுப்புள்ள பால் குடித்து வரலாம்.
- பழுத்த வாழைப்பழம்: வாழைப்பழம் இயற்கையான ஆன்டாக்சிட் ஆக செயல்படுகிறது. இது, ஆசிட் ரிஃப்ளக்ஸை குறைத்து அசிடிட்டி ஏற்படாமல் தடுக்கும். காலையில் அசிடிட்டி ஏற்பட்டால் காலையில் ஒரு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.
- இளநீர்: அசிடிட்டியை நடுநிலையாக்க உதவியாக இருப்பது இளநீர். வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பது அமிலத்தன்மையை குறைக்கவும், நாள் முழுவதும் செரிமானம் சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கும்.
- துளசி: துளசி இலைகள், வயிற்றில் அமிலம் உற்பத்தியை குறைக்க உதவுகிறது மற்றும் வயிற்றில் உள்ள எரிச்சலைத் தணிக்கிறது. காலையில், துளசி இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது துளசி டீ போட்டு குடிப்பது அசிடிட்டியிலிருந்து நிவாரணம் தருவதோடு செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.
- தேன்: வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்கும் போது, வயிறு சமநிலையாகி அசிடிட்டியை குறைக்கிறது. உணவுக்கு முன், வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வர அசிடிட்டியில் இருந்து நிவரணம் கிடைக்கும். ஆயுர்வேதத்தில் அசிடிட்டி என்பது பித்த தோஷமாக கருதப்படுகிறது. அசிடிட்டி சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் காரசாரமான மற்றும் அமிலத்தன்மை கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என அறிவிறுத்தப்படுகிறது
இதையும் படிங்க: சொறி சிரங்கு முதல் சிறுநீரக கல் பிரச்சனை வரை..தினமும் 1 செவ்வாழை சாப்பிடுங்கள் போதும்! உடலில் யூரிக் அமிலம் உற்பத்தியை குறைக்கணுமா? இந்த 5 சூப்பர் ஃபுட்ஸ் கட்டாயம் உதவும்! |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்