ETV Bharat / health

"என் உடல் என் உரிமை" கருணைக்கொலையை.. ஆதரிப்பதா? எதிர்ப்பதா? - Euthanasia needs a clear solution

Euthanasia இந்த ஆங்கில வார்த்தையின் பொருள் "என் உடல் என் உரிமை" என்பதாகும். மனநல பிரச்சனைகளுக்கு மருத்துவ உதவியை நாட இயலாதவர்களுக்கு இந்த உரிமை ஆபத்தானதாக போய்விடும் என சிலர் இதனை எதிர்க்கின்றனர். இதற்கு ஆதரவான குரல்களும் இல்லாமல் இல்லை. தீர்க்கமான ஒரு கோடு வரையப்படாத வரையிலும் இதற்கு தீர்வு இல்லை. இது தொடர்பாக பத்திரிகையாளர் தவுபீக் ரஷீத்தின் எண்ணத்தில் உருவான கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கே காணலாம்.

euthanasia-should-people-suffering-from-mental-illness-be-allowed-assisted-dying
"என் உடல் என் உரிமை" கருணைக்கொலையை.. ஆதரிப்பதா? எதிர்ப்பதா?
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 6:06 PM IST

Updated : Apr 6, 2024, 4:56 PM IST

ஐதராபாத்: நான் இன்று கூகுளில் Medically assisted death என தேடிய போது, உங்களுக்கு உதவி தேவை என தற்கொலை தடுப்பு மையங்களின் தொலைபேசி எண்ணை சர்ச் என்ஜின் காட்டியது. மருத்துவ உதவியுடன் கூடிய மரணத்திற்கும், தற்கொலைக்குமான வேறுபாடு அறியாத நிலை தான் இன்று கூகுள் மட்டுமல்லாது, பொதுவிலும் உள்ளது. இறப்பதற்கு மருத்துவ உதவியை நாடுவதும், அதற்கு அனுமதி வழங்கும் சட்டமும் நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு ஒரு சம்பவத்தை சொல்லியாக வேண்டும். நெதர்லாந்தை சேர்ந்த 28 வயதான பெண் ஒருவர் தான் இறப்பதற்கு மருத்துவ உதவி கோரியுள்ளார். உடல் ஆரோக்கியம், ஆண் நண்பர், வீட்டில் செல்ல பிராணிகள் என அழகான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கும் அவர் ஏன் இந்த முடிவுக்கு வர வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

euthanasia-should-people-suffering-from-mental-illness-be-allowed-assisted-dying
"என் உடல் என் உரிமை" கருணைக்கொலையை.. ஆதரிப்பதா? எதிர்ப்பதா?

அந்த கேள்விக்கான பதில்தான் எதையாவது யோசித்துக்கொண்டே இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலை. மருத்துவர்களின் உதவியுடன் உறங்கும் அவர், அப்படியே தனது கடைசி உறக்கத்தை வேண்டி நிற்கிறார். நெதர்லாந்தில் இது புதிதான வழக்கு ஒன்றும் அல்ல.. இதுபோன்ற ஏராளமான வழக்குகள் இருக்கின்றன.

சமீபத்தில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் நொய்டாவை சேர்ந்த 48 வயதான தனது நண்பர், நோய்வாய்ப்பட்ட காரணத்தால் அங்கிருந்து சுவிட்சர்லாந்த் சென்று இறப்பதற்கு மருத்துவ உதவியை நாடி அனுமதி பெற்ற முயற்சித்துள்ளார். அதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

2014ஆம் ஆண்டு முதல் மயால்ஜிக் என்செபலோமைலிடிஸ் என்ற உடல் சோர்வு, தூக்கமின்மை, மூச்சு திணரல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் அந்த நபர் இறப்பதற்கு மருத்துவ உதவியை நாடும் சட்டத்தின் மூலம் அனுமதி நாடுவது சரியா? தவறா? ஆனால், இந்த நோய்கு இறப்பதற்கு மருத்துவ உதவி வழங்கும் சட்டம் அனுமதிக்க முடியாது என தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தியாவை பொருத்தவரை கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரித்தது. மேலும், நோயுற்ற நோயாளிகளுக்கு அந்த உரிமையைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் பரிந்துரைத்தது. அதனை தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டில், இதில் பல்வேறு திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இறப்பதற்கு மருத்துவ உதவியை நாடும் செயலை Medical Aid In Dying என ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். இந்த சட்டத்தை நெதர்லாந்து மட்டும் அல்ல, கனடா உள்ளிட்ட பல நாடுகள் அங்கீகரித்து வரும் நிலையில், இது தற்கொலை எண்ணத்தில் இருக்கும் சிலருக்கு ஆதரவாக அமைந்துவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

வலியோடு வாழும் வாழ்க்கையை துறப்பதும், வாழ்க்கையை சமாளிக்க முடியாமல் உயிரை மாய்ப்பதும் ஒன்றாகிவிடாது. ஆகையால் இறப்பதற்கு மருத்துவ உதவியை நாடும் சட்டத்தை, வாழ்நாள் முழுவதும் நோயால் வலியால் வாடும் மக்களின் நிம்மதியான உறக்கத்திற்கு அனுமதித்தாலும், தற்கொலைக்கு ஆதரவாக அமைந்துவிடாதபடி சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே சிறந்தது.

இதையும் படிங்க: ஆண்களை விட பெண்களுக்கு ஒற்றை தலைவலி ஏற்படும் ஆபத்து 3 மடங்கு அதிகம் - ஏன் தெரியுமா? - Risk Of Migraines

Last Updated : Apr 6, 2024, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.