ETV Bharat / health

மதிய உணவுக்குப் பின் தூக்கம் வந்து தள்ளாட வைக்கிறதா? அப்போ உங்களுக்கு Food coma இருக்கலாம்.! - Do you feel drowsy after lunch - DO YOU FEEL DROWSY AFTER LUNCH

மதியம் உணவு உட்கொண்ட பின் பலருக்கும் உறக்கம் தள்ளாட வைக்கும். அதிலும் குறிப்பாக அலுவலகத்தில் பணியாற்றும் நபர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் என்ன? இதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 5:22 PM IST

சென்னை: "Food coma" என்ற இந்த வார்த்தையைக் கேட்டிருக்கிறீர்களா? இது தான் மதிய உணவிற்குப் பின் உறக்கம் வருவதைக் குறிக்கும் மருத்துவ சொல்லாடல். நம்மில் பலருக்கு மதியம் உணவு உட்கொண்டவுடன் சொடுக்கிக்கொண்டு உறக்கம் வரும். ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்தால்தான் சுறுசுறுப்பாக இருக்கும் என்று தோன்றும். அது மட்டும் அல்ல ஒரு சிலர், "மத்தியம் நல்லா மூக்க முட்ட சாப்டுட்டு ஒரு தூக்கம் போட்டாத்தான் சரியா வரும்" எனச் சொல்லிக் கேட்டிருப்போம்.

இப்படி மதிய உணவுக்கும், உறக்கம் வருவதற்கும் என்ன தொடர்பு? அதிலும் குறிப்பாக, அலுவலகங்களில் இருக்கையில் அமர்ந்து பணியாற்றும் நபர்கள் பலர் மதிய உணவுக்குப் பின் உறக்கம் வந்து தள்ளாடுவதால் பணியில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இதைத் தான் மருத்து மொழியில் "Food coma" மற்றும் postprandial somnolence எனக்கூறுகின்றனர். இதன் பொருள் உணவுக்குப் பின் உறக்கம் என்பதாகும்.

"Food coma" உங்களுக்கு உள்ளதா என்பதை எப்படி அறிந்துகொள்ள முடியும்?

  • மதியம் உணவு உட்கொண்டவுடன் உறக்கம் வரும்
  • உடல் ஆற்றல் இழந்து காணப்படும்
  • மூளை அமைதியாக, எதையும் சிந்திக்காமல் இருக்கும்
  • எழுந்து வேலை செய்யச் சோர்வாக இருக்கும்
  • கண்கள் உங்களை அறியாமல் மூடி மூடி திறக்கும்
  • நிம்மதியாகப் படுத்து உறங்கி எழுந்திருக்கத் தோன்றும்

"Food coma" வர என்ன காரணம்? உங்கள் மதிய உணவில் அதிகம் கார்போ ஹைட்ரேட் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொள்வதே இதற்குக் காரணம். மேலும், நீங்கள் வயிறு நிரம்ப உணவு உட்கொள்வதால் உடல் அதைச் செரிக்கச் செய்ய வேண்டி ரெஸ்ட் மோடிற்குச் செல்லும். அந்த நேரத்தில்தான் உங்களுக்கு உறக்கம் வரும். இந்த உறக்கம் வரும் உணர்வு, நீங்கள் உணவு உட்கொண்டதில் இருந்து சுமார் 4 மணி நேரம் வரை இருக்கலாம் என சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இது குறித்த ஆய்வுக்கட்டுரையை ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை துறை வெளியிட்டுள்ளது. அதில் "Food coma" குறித்து ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"Food coma"-வில் இருந்து வெளியேவர என்ன செய்ய வேண்டும்?

  • இரவு 8 மணிக்குள் உணவு உட்கொள்ள வேண்டும்
  • இரவு நேரம் விரைவாக உறங்க வேண்டும்
  • மதிய உணவை அளவாக உட்கொள்ள வேண்டும்
  • கார்போ ஹைட்ரேட், சர்க்கரை நிறைந்த உணவுகளைக் குறைவாக உட்கொள்ள வேண்டும்
  • பச்சைக் காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை உட்கொள்ளலாம்
  • மதியம் உறக்கம் வரும்போது வெளிச்சம் உள்ள பகுதியில் அமர வேண்டும்

இதையும் படிங்க: உயிருக்கு ஆபத்தா செல்ஃபோன் கதிர் வீச்சு? SAR குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.! - How To Check Sar Value

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.