சென்னை: குழந்தை பருவத்தில் ஒருவர் உடல் எடை அதிகமாக இருந்தால் அவரது ஆயுட்காலம் குறைவாக இருப்பதாக ஐரோப்பிய காங்கிரஸ் நடத்திய ஆய்வு கூறுகிறது. ஆங்கிலத்தில் BMI என அழைக்கப்படும் உடல் நிறை குறியீட்டு எண்-னானது நான்கு வயது குழந்தைக்கு 3.5 BMI க்கு மேல் இருந்தால், அவர் 39 வயது வரை மட்டுமே உயிர் வாழ வாய்ப்புள்ளதாக இத்தாலி மற்றும் வெனிஸில் ஐரோப்பிய காங்கிரஸ் சார்பில் உடல் பருமன் குறித்து முதன்முறையாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் சுமார் 2.7 மில்லியன் பேர் 2 முதல் 29 வயதுக்குட்பட்டவர் ஆக இருந்துள்ளனர் . உடல் பருமனின் ’ஆழமான விளைவுகளை’ கண்டறியும் முயற்சியில் இறங்கிய ஆய்வாளர்கள், மனிதனின் வயது மற்றும் அவரின் குழந்தைப் பருவ எடையை ஒப்பிட்டு அவர்கள் வாழப்போகும் ஆயுட்காலத்தை அளவிட்டுள்ளனர்.
ஆய்வின் முடிவில் ஜெர்மனி சார்ந்த லஃப் சயின்ஸ் ஆலோசனை கூடத்தின் ஆய்வாளரான ஸ்ட்ராடூ வீட்மேன் ’ஆரம்பகால உடல் பருமன் மாடல்’ என்னும் உடல் பருமனை அளவிடும் மாதிரியை கண்டுபிடித்துள்ளார். மேலும், குழந்தை பருவத்தில் இருக்கும் உடல் பருமனுக்கு எளிதில் தீர்வு காண வழி இருப்பதால் அப்போதே எடை குறைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்.
அவ்வாறு கவனம் செலுத்தவில்லை என்றால், உடல் பருமனுடன் வளர்ந்து வருபவர்கள் தனது 25 வயதில் டைப் 2 நீரிழிவு நோய் , இருதய கோளாறு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டு, 25 வயதில் உயிரிழக்க 27 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்றும் 35 வயதிற்குள் உயிரிழக்க 45 சதவீதம் வாய்ப்பு உள்ளதாகவும் முடிவுகள் காட்டுகின்றன.
இதையும் படிங்க:ஜிம்முக்கு போனாலும் எடை குறையலயா? கவலை வேண்டாம்.. பலன்கள் அதுக்கும் மேல!