ETV Bharat / health

வாரத்திற்கு இத்தனை அடி நடந்தால் போதுமா? சென்னைவாசிகளின் லேட்டஸ் ஃபேவரைட் வாக்கிங் ஸ்பாட் இது தான்! - CHENNAI HEALTH WALK

CHENNAI HEALTH WALK: உடற்பயிற்சி முக்கியத்துவம் அறிந்து சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பெசன்ட் நகர் ஹெல்த் வாக் சாலையில் இருக்கும் வசதிகள் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு போதுமானதாக உள்ளதா? வாக்கிங் முக்கியத்துவம் குறித்து தினமும் நடைபயிற்சி செல்பவர்கள் சொல்வது என்ன?என்பதை பற்றி விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பு

பெசன்ட் நகர் 'Health Walk'
பெசன்ட் நகர் 'Health Walk' (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 9, 2024, 5:25 PM IST

சென்னை: டிராஃபிக் பற்றிய கவலை வேண்டாம். மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்கான வசதி, மிதந்து வரும் கடல் காற்று, இளையராஜா பாட்டு கேட்டு அப்படியே ஒரு வாக்கிங் போனா எப்படி இருக்கும். ஆசை தான்! ஆனா சென்னையில இதெல்லாம் எப்படி? என யோசிக்கிறீர்களா? இப்படி யோசிப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது தான் சென்னையில் இருக்கும் இந்தியாவின் முதல் 8 கிலோ மீட்டர் நீள வாக்கிங் பாதை.

டோக்கியோ நகர மாடலில் உருவாகியிருக்கும இந்த நடைபாதை தற்போது உடல் நலம் பேணுபவர்களின் ஃபேவரைட் ஸ்பாட்டாக மாறியுள்ளது. காலையில் எழுந்து நடைபயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பதாக கடந்த 20 வருடங்களாக வாக்கிங் செல்லும் 80 வயதான சங்கர் நடைபயிற்சியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறார்.

நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தின் கீழ், அடையார் ஆவின் பார்க்கில் இருந்து பெசன்ட் நகர் பீச் வரைக்கும் என 8 கிலோ மீட்டர் நீள பாதை கடந்த ஆண்டு திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.காலை 5 மணி முதல் 8 மணி வரை இந்த சாலையில் சென்று பார்த்தால் குழந்தைகள் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்கிங் செல்வதை பார்க்கலாம்.

நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த குறிப்பிட்ட நேரத்தில் வாகன போக்குவரத்து தடை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி, தினசரி நடைபயிற்சி செய்பவர்களிடம், நடைபயிற்சி நன்மைகளையும், அவர்களது அனுபவங்களையும் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் கேட்டது. அப்போது, ''நான் இங்கு 20 வருடங்களாக நடைப்பயிற்சி செய்து வருகிறேன். காலையில் எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்வதால் அன்றைய நாள் சிறப்பாக அமைகிறது.

உடல் பலம் அதிகரிக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு சிறந்தது, உடல் எடையை குறைப்பதற்கும், மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் உதவுகிறது, இந்த பெசன்ட் நகரில் நடப்பதற்கு அருமையாக உள்ளது" என 80 வயதான சங்கர் தெரிவித்தார். மேலும், "இங்கு நிறைய பேர் நடப்பதால் தனியாக நடக்கிறோம் என்ற எண்ணம் வராது. அருகில் கடற்கரை இருப்பதால் சுவாசிப்பதற்கு நன்றாக இருக்கிறது.

வழுக்கி விழும் அபாயம்: இங்கு இருக்கிற பிரச்சனை என்னவெனில் நடக்கும் இடத்தில் கடைகளை போடுகின்றனர், நடப்பதற்கு போடப்பட்டுள்ள டைல்ஸ் வழுவழுப்பாக உள்ளது, இதனால் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே கொஞ்சம் நடப்பதற்கு ஏதுவாக சற்று முரடாக இருக்கும் டைல்ஸ் போட வேண்டும். நடைப்பயிற்சியில் இருக்கும் நன்மையை இன்றைய கால இளைஞர்கள் புரிந்து கொண்டுள்ளனர். நடைப்பயிற்சி குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் வந்துள்ளது'' என்றார்.

வெளிநாடுகளில் நடைபயிற்சி செய்வதற்கான வசதிகள் இருந்தாலும் காலநிலை மாற்றம் காரணமாக நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாது என அமெரிக்க வாழ் தமிழர் சந்தீப் நமது ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். "நடைபயிற்சி என்பது அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டும். அது எங்களுக்கு ஒரு தியானம் போல. எந்த வேலையிலும் கவனம் செலுத்தாமல் ஒரு 15 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

குறிப்பாக சாப்பிட்டு முடித்த பின் நடப்பது ரத்த ஓட்டத்தை சீராக்கும். நாங்கள் சிகாகோவில் இருந்து சென்னை வந்துள்ளோம், நாங்கள் தினமும் அங்கு நடப்போம். சென்னையில் என்ன நல்ல விசயம் எனில் காலநிலை தான். அங்கு மிகவும் குளிராக இருக்கும், எனவே வீட்டில் தான் நடப்போம். ஆனால் இங்கு எளிதில் வெளியே நடக்க முடியும், நடைப்பயிற்சி செய்வதற்கு அனைத்து வசதிகளும் செய்துள்ளனர்.

இந்த வசதிகள் சிறப்பாக உள்ளது. குழந்தைகளோடு வாக்கிங் போகலாம், போக்குவரத்தை பற்றி கவலை பட தேவையில்லை. தனியாக வந்தால் ஹெட் போன் மாட்டிக்கொண்டு இளையராஜா பாடல் கேட்டுக்கொண்டு நடப்பேன்" என்றார்.

பின்னர் பேசிய மருத்துவர் ப்ரித்வி, ''அனைவரும் பரபரப்பாக இருக்கும் இந்த காலத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது. நமது அரசாங்கம் நடைபாதை அமைத்து நடைபயிற்சி செய்வதற்கு ஊக்குவிக்கிறார்கள். ஒரு வாரத்தில் 3 முறை 3000 அடி நடந்தாலே போதும் நமது உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக பெசன்ட் நகரில் இந்த வசதிகள் செய்து கொடுத்தது சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.

உடல் எடையை குறைக்க, நோய்களில் இருந்து தப்பிக்க, மனதை மகிழ்ச்சியாக வைக்க என அனைத்திற்கும் ஒரே தீர்வாக உடற்பயிற்சி மாறியுள்ளதை நாம் அறிந்ததே. ஆனால், அதை எப்படி ஆரம்பிப்பது, என்பதில் தான் பலருக்கு குழப்பம். உடற்பயிற்சி என்று யோசிக்கும் போது நமக்கு முதலில் நினைவிற்கு வருவது GYM. ஆனால், நேரமின்மை போன்ற காரணங்களால் ஜிம்மிற்கு அனைவராலும் செல்ல முடியாத சூழல் உள்ளது. ஆனால், தினமும் காலை 30 நிமிடம் நடந்தாலே உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்திகொண்டே உள்ளனர்.

இதையும் படிங்க: குழந்தைகளின் பற்கள் வரிசைப்படுத்தலில் தாய்ப்பால் பங்கு வகிக்கிறதா? மருத்துவர் கூறுவது என்ன? - Breast Feeding and Healthy Baby

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.