திருமனத்தின் போது முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என விரும்பாதவர்கள் யாராவது இருக்க முடியுமா? அதிலும், குறிப்பாக திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே பெண்கள் முக அழகை பராமரிக்க தொடங்கி விடுவார்கள். அப்படி, இயற்கையாகவே சருமத்தை பராமரித்து திருமணத்தின் போது ஜொலிப்பதற்கு இந்த பானங்களை குடித்து பாருங்கள்...
ABC ஜூஸ்: ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகிய மூன்று சூப்பர் ஃபுட்களின் கலவை தான் ஏபிசி ஜூஸ். இதை தினசரி குடித்து வருவதன் மூலம் சருமம் பளபளப்பாக இருக்கிறது. கூடுதலாக, புற ஊதா கதிர்கள் விளைவிக்கும் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்குகிறது.
வெள்ளரி ஜூஸ்: சருமத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பானமாக இருக்கிறது வெள்ளரிக்காய் ஜூஸ். தினமும் காலை வெறும் வயிற்றில் இதை குடித்து வருவதனால் நீரேற்றம் மற்றும் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கிறது. வெள்ளரிக்காய், புதினா மற்றும் துளசியை அரைத்து ஜூஸ் செய்து குடிப்பது சிறந்த பலன்களை தருகின்றன.
இளநீர்: சுருக்கம், பரு என அனைத்து சரும பிரச்சனைக்கும் தீர்வாக இருப்பது நீர் தான். அதிலும், இயற்கையாக கிடைக்கும் இளநீர் தண்ணீரை விட அதிகப்படியான நன்மைகளை தருகின்றன. இளநீரில் நிறைந்துள்ள எலக்ட்ரோலைட்டுகள், வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட தாதுக்கள் நீரேற்றத்தை ஆதரிப்பதோடு சரும ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
சருமத்தின் ஈரப்பதத்தை சமநிலையில் வைக்க இளநீர் உதவுவதால் முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கிறது. அடுமட்டுமல்லாமல், இது தோல் எரிச்சலையும் தடுக்கிறது.
கேரட் ஜூஸ்: கேரட் ஜூஸ் சருமத்திற்கு பல அதிசயங்களைச் செய்கிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ தோல் செல்களை மேம்படுத்தி மென்மையான மற்றும் ஒளிரும் நிறத்திற்கு பங்களிக்கிறது. அதுமட்டுமல்லாமல், இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ, ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக பாதுகாப்பதோடு கொலாஜன் உற்பத்தியையும் மேம்படுத்துகிறது.
தேநீர்: மூலிகைகளை சூடு தண்ணீருடன் உட்கொள்ளும் போது சருமத்திற்கு கூடுதல் ஊக்கம் அளிக்கிறது. சாமந்தி, ரோஜா மற்றும் செம்பருத்தி ஆகிய மலர்களை கலந்து தேநீராகவோ அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பது வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. குறிப்பாக, இவற்றை வெயில் காலங்களில் குடிப்பதால் சருமத்திற்கு தேவையான நீரேற்றத்தை வழங்குகின்றது
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்