சென்னை: நம் முன்னோர்கள் மட்டும் எப்படி ஆரோக்கியமாக 100 வயதைக் கடந்தும் வாழ்ந்தார்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று யாரிடமாவது கேட்டால், நமது முன்னோர்களின் உணவுப் பழக்கம் தான் என்று கூறுவர். அதற்கு காரணம், அவர்களின் உணவுப் பழக்கம் மட்டும் கிடையாது. அவர்கள் பழக்கப்படுத்தி வந்த உணவுப் பாத்திரங்களும் தான். உணவுப் பாத்திரங்களில் என்ன இருக்கிறது என்று எண்ணி விடாதீர்கள். நாம் உண்ணும் உணவுகளின் சக்திகளை வீணாக்காமல், அதை நஞ்சாக்காமல் வைத்திருக்க உணவுப் பாத்திரங்கள் தான் பெரிதும் உதவுகின்றன.
நம் முன்னோர்கள் மண்பாண்டங்கள், வெள்ளி, பித்தளை, செம்பு என அவர்களின் வசதிக்கேற்ப பயன்படுத்தினர். ஆனால், நாம் நாகரீகம் என்று எல்லாவற்றையும் மாற்றி விட்டு, உடல் உபாதைகளைச் சந்தித்து விட்டு தற்போது மீண்டும் பழமையைத் தேடி ஓடுகிறோம். மீன் குழம்புக்காகவே மண் பானை, தண்ணீர் குடிப்பதற்காக குடம் முதல் வாட்டர் கேன் வரை செம்பு, பித்தளை உள்ளிட்டவற்றை வாங்குகிறோம்.
அப்படி நாம் முன்னோர் பயன்படுத்திய செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் என்ன தான் இருக்கிறது என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம். செம்பு, பித்தளை மற்றும் வெண்கலப் பாத்திரங்கள் ஆயுர்வேத முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது. பித்தளையில் 70 சதவீதம் தாமிரம் மற்றும் 30 சதவீதம் துத்தநாகம் உள்ளது. இவை சில நோய்களைக் குணப்படுத்தும் திறன்களைக் கொண்டுள்ளன.
உணவின் சுவை அதிகரிக்கும்: பித்தளை பாத்திரங்களில் உணவு சமைக்கும் போது உணவின் சுவை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இவற்றில் சமைக்கும் போது அந்த பாத்திரங்களில் இருந்து இயற்கையான எண்ணெய் சுரக்கும். இது உணவின் சுவையை அதிகரிக்கச் செய்வதாகவும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
செரிமானத்தை மேம்படுத்தும்: தேநீர் மற்றும் பிற உணவுகளுக்கு பித்தளைக் கிண்ணங்களை பயன்படுத்துவது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரோகினி பாட்டீல். பித்தளைப் பாத்திரங்களில் சமைக்கும் போது அதிலிருந்து வெளியாகும் சத்துக்கள், நாம் உண்ணும் உணவோடு நேரடியாக உடலுக்குள் செல்லும். இந்த சத்துக்கள் நன்கு செரித்து மலச்சிக்கல், வாயுப்பிடிப்பு மற்றும் அஜீரணம் உள்ளிட்ட பிரச்சினைகளைக் குறைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: செம்பு, பித்தளை பாத்திரங்களில் தண்ணீரை சேமித்து வைத்து குடித்து வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும்.
சரும பிரச்னைகளில் இருந்து விடுபட: பித்தளை பாத்திரங்களில் சமைத்த உணவை உண்பது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்கிறார் நிபுணர் ரோகிணி பாட்டீல். தினமும் டீ, காபி பழக்கம் உள்ளவர்கள் பித்தளை பாத்திரங்களில் டீ, காபி தயாரித்து குடித்தால் முகப்பரு, முக சுருக்கம் உள்ளிட்ட சரும பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் என நிபுணர் ரோகினி கூறுகிறார்.
ரத்த சுத்தகரிப்பு: பித்தளை பாத்திரங்களில் சமைக்கும் போது, அதில் உள்ள துத்தநாகம் உணவுப் பொருட்களில் கலக்கும். அதை நாம் உண்ணும் போது உடலில் ரத்தம் அதிகரிக்கும் என்றும், அதில் உள்ள சத்துக்கள் ரத்தத்தைச் சுத்திகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
செய்யக்கூடாதவை: பித்தளை பாத்திரங்களில் சமைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பித்தளை பாத்திரங்களில் எந்தெந்த உணவுகளை சமைக்கக்கூடாது என்பதாகும். பித்தளை பாத்திரத்தில் தக்காளி மற்றும் எலுமிச்சை, நார்த்தங்காய் உள்ளிட்ட சிட்ரஸ் அமிலம் உள்ள பொருட்களை சமைக்கக்கூடாது. ஏனெனில், இவை எதிர்வினை புரிந்து உணவின் சுவையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். இது உடலிற்கு கேடு விளைவிப்பதாகும்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: புற்றுநோய், சர்க்கரை நோய் வராமல் இருக்க பெஸ்ட் சாய்ஸ்.. பழுப்பு அரசியில் இப்படிப்பட்ட நன்மைகளா? - Goodness Buried In Brown Rice