சென்னை: பிறந்த குழந்தைகளின் பசியைப் போக்கும் உணவாக இருப்பது தாய்ப்பால். இந்த தாய்ப்பாலின் நன்மை எண்ணற்றவை என்றாலும், சமீப காலத்தில் பல தாய்மார்கள் அதை பின்பற்றுவதில் தயக்கம் காட்டுவதாக பல்வேறு தரவுகள் தெரிவிக்கின்றன. அதற்கு காரணம், தாய்ப்பால் கொடுக்கும் தாயின் உடலில் ஏற்படும் மாற்றங்களாகும். ஒரு தாய் தாய்ப்பால் கொடுப்பதில் நீண்ட கால பலன்கள் அதிகமாக இருக்கிறது.
அதேநேரம், பல்வேறு சூழல்கள் காரணமாக பச்சிளம் குழந்தைக்கு உணவாக அமைவது பாட்டில் பால். இவற்றை உணவாக எடுத்துக் கொள்ளும் குழந்தைகள் அதிகளவில் பாலைக் குடிக்க வேண்டும் என கருதி சுவைக்காக அதில் சர்க்கரை மற்றும் குளுக்கோஸ் சேர்க்கப்படுகிறது.
இவ்வாறு குழந்தைகள் பாலில் சர்க்கரை மற்றும் குளுக்கோஸ் சேர்ப்பது நல்லதா? ஆரோக்கியத்தில் ஏதாவது தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் அபர்ணா வத்சவாய் கூறுகையில், “குழந்தைகள் ஒரு வயதுக்கு வளர்ந்த பிறகு சர்க்கரை மற்றும் குளுக்கோஸ் சேர்ப்பது குறித்து சிந்திக்க வேண்டும். அப்போது நீங்கள் தாராளமாக பசும்பால், பாக்கெட் பால் கொடுக்கலாம். இவற்றில் தண்ணீர் சேர்க்கக்கூட தேவையில்லை.
சர்க்கரையும் பாலும்: அப்போது, குழந்தைகள் சர்க்கரை இல்லாமல் பால் குடித்தால் அப்படியே கொடுங்கள். ஆனால், அவர்கள் அதில் சுவை எதிர்ப்பார்த்து குடிக்காத பட்சத்தில், முதலில் குழந்தையின் வயதுக்கு ஏற்ற எடையில் உள்ளார்களா என சரிபார்க்க வேண்டும். பின் அப்படி இருக்கும் பட்சத்தில், பாலில் சிறிதளவு சர்க்கரை, தண்ணீர் மற்றும் குளுக்கோஸ் சேர்க்கலாம். ஆனால், அப்போது நீங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவை மென்மையாக்கி ஊட்டி விடுவது, அவர்களின் செரிமானத்தை எளிமையாக்கும்” என்றார்.
குழந்தைகள் எந்த நேரத்தில் பால் குடிக்கலாம்? குழந்தைகள் எந்த நேரத்திலும் பால் குடிக்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பால் குடிப்பதால் குழந்தைகள் நாள் முழுவதும் வலுவாக, ஆரோக்கியத்துடன் செயல்படுகிறார்கள். இந்த பால் போல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு வேறு எதுவும் இல்லை. எனவே, குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் பால் குடிக்கலாம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பால் குடிப்பதால் 8 வயதிலே பூப்படையும் பெண்கள்? மரபணு மாற்றத்தால் இப்படிப்பட்ட விளைவுகளா?