பசிக்கும் போது சாப்பிடுவது சாதாரணமானது. ஆனால் சாப்பிட்ட பிறகும் பசி எடுத்தால் அதற்குப் பின்னால் சில கரணங்கள் இருக்கின்றன என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். எப்போது பசி எடுப்பது போன்ற உணர்வு உடலுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமின்றி பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்குகின்றன. உங்களுக்கு எப்போதும் பசி உணர்வு ஏற்படுகிறதா? அவற்றிகான காரணம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..
நார்ச்சத்து குறைபாடு : பசியைக் கட்டுப்படுத்துவதில் நார்ச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். பழங்கள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் நார்ச்சத்து நிறைந்தவை. இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கும். கூடுதலாக, நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதால், நீண்ட நேரம் நிறைவாக உணர முடியும். இதனால் அடிக்கடி பசி எடுக்கும் உணர்வு குறைகிறது.
புரதக் குறைபாடு: புரதச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது பசியைக் குறைக்க உதவும். பருப்பு, பீன்ஸ், தயிர், பனீர் மற்றும் முட்டை போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தூக்கமின்மை: கிரெலின் மற்றும் லெப்டின் ஆகியவை பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள். கிரெலின் பசியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் லெப்டின் பசியை குறைக்கிறது. ஆனால் தூக்கமின்மையால் அவதிப்படுபவருக்கு கிரெலின் அளவு அதிகரித்து லெப்டின் அளவு குறைகிறது. போதுமான தூக்கம் இந்த ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவும். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்வது முக்கியம்.
நீர்ச்சத்து: உடலில் நீர்ச்சத்து குறையும் போது, அதனுடைய தாக்கம் பசியின் வெளிப்பாடாக இருக்கிறது. எனவே பசி எடுக்கும் போது போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். இது நீரிழப்பு மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஹார்மோன் சமநிலையின்மை: தைராய்டு, இன்சுலின் மற்றும் லெப்டின் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள் பசியை அதிகரிக்கும். எனவே அடிக்கடி பசி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
மருந்து உட்கொள்வது: மருந்துகளின் பயன்பாடு அதிகரித்த பசியின் காரணங்களில் ஒன்றாகும். சில மருந்துகளை உட்கொள்ளும் போது அதிகப்படியான பசியை நீங்கள் கண்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.
இரத்த சர்க்கரை அளவு: இரத்தச் சர்க்கரைக் குறைவு பசியின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். சரிவிகித உணவை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையை குறைக்கலாம். மேலும் ஆரோக்கியமற்ற உணவுகளை உணவில் சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்