ETV Bharat / entertainment

"AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இசையமைப்பாளர்கள் வேலை பறிபோகும்" - யுவன் ஷங்கர் ராஜா - yuvan shankar raja about AI - YUVAN SHANKAR RAJA ABOUT AI

Yuvan shankar raja about AI technology: AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் அடுத்த 10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா செய்தியாளர் சந்திப்பு
யுவன் ஷங்கர் ராஜா செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 24, 2024, 5:28 PM IST

கோயம்புத்தூர்: கோவையில் வரும் அக்டோபர் 12ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி (live in concert) நடைபெறுகிறது. இது தொடர்பாக இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டளர்கள் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது பேசிய யுவன் சங்கர் ராஜா, "ரசிகர்களுக்கு பிடித்தமான பாடல்களுடனும், புதிய முயற்சிகளுடனும் இசை நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ளோம். இந்த இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக இருக்கும் என நம்புகிறேன். ரசிகர்கள் மிகவும் வைப் உணர்வு கொண்டவர்கள், அவர்களின் உணர்வுகள் மூலமாக தான் நல்ல பாடல்களை என்னால் நிகழ்ச்சியில் பாட முடிகிறது.

யுவன் ஷங்கர் ராஜா செய்தியாளர் சந்திப்பு வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

பழைய பாடல்கள் ரீமேக் செய்வது, அவர்களின் மற்றொரு வெர்ஷனாக பார்க்கிறேன். இதனால் பாடலின் உண்மைத் தன்மை மாறாது. AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் அடுத்த 10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது. AI தொழில்நுட்பத்தில் உண்மைக் தன்மை இருக்காது என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியது உண்மை தான். விஜய் சார் கட்சிக்கு பாடல் கேட்டால் கண்டிப்பாக செய்வேன்.

பழைய பாடல்களை பயன்படுத்துவதில் காப்புரிமை பிரச்சனை நிச்சயம் வரும். ஆனால் முன்னதாகவே அனுமதி பெற்று பாடல்களை பயன்படுத்துவது தான் சரியான முறையாக இருக்கும். ரசிகர்களின் விருப்பத்தின் பேரில் ’கோட்’ திரைப்படத்தில் பாடல்களில் திருத்தம் செய்தோம்” என்றார்.

பின்னர் பேசிய யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், "கோவையில் முதல் முறையாக 360 டிகிரி நிகழ்ச்சி நடத்துகிறோம். இந்நிகழ்ச்சி கொடிசியாவில் நடைபெறுகிறது. சென்னையில் வெற்றிகரமாக இது போன்ற நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளோம்.

இதையும் படிங்க: லட்டு குறித்து பேசியதற்கு எதிர்ப்பு... பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி! - karthi apologized for laddu issue

கோவையில் நடக்கும் நிகழ்வு மிகவும் முக்கியமானதாக இருக்கும். டிக்கெட் 500 முதல் 25,000 வரைக்கும் விற்பனை செய்கிறோம். 20 ஆயிரம் டிக்கெட் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தள்ளு முள்ளு நடக்காமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. யுவன் நிகழ்வில் போதை பொருள் தேவை இருக்காது. யுவனின் பாடல்களே ஒரு போதை தான்" என்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.