ETV Bharat / entertainment

'ஒரு கிடாவின் கருணை மனு' பட இயக்குநருடன் இணையும் நடிகர் யோகி பாபு! - suresh sangaiah

Yogi Babu Movie: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வழங்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்க நடிகர் யோகிபாபு நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 10:30 PM IST

சென்னை: இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான “ஒரு கிடாவின் கருணை மனு” மற்றும் “சத்திய சோதனை” படங்கள் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் அனைத்துத் தரப்பினர் பாராட்டுகளையும் பெற்றது.

இதனை அடுத்துக் கடந்த ஆண்டு சத்திய சோதனை திரைப்படம் வெளியானது. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது யோகி பாபு நடிக்கும் புதிய படத்தை இயக்கியுள்ளார். ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார், லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஆர் பி டாக்கிஸ் (RB Talkies) சார்பில் எஸ்.ஆர் ரமேஷ் பாபு மற்றும் Box office studios சார்பில் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து இப்படத்தினைத் தயாரிக்கின்றனர். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படத்தில் நடிகர்கள் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. படம் குறித்து நடிகர் யோகி பாபு கூறுகையில், “சுரேஷ் சங்கையாவின் ஒரு கிடாவின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படங்கள்.

அவருடைய படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருந்தேன், அந்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இது டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படைப்பாகும். மேலும் வரும் காலங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் பல தரமான கதையம்சமுள்ள படைப்புகளில் நான் தொடர்ந்து நடிப்பேன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்” என்றார்.

படம் குறித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா கூறுகையில், “இந்த வாய்ப்பை வழங்கிய டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தப் படத்தின் திரைக்கதை அனைத்துப் பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில், அசத்தலான பொழுதுபோக்குடன், பரபரப்பான ரோலர் கோஸ்டர் அனுபவமாக இருக்கும். மேலும் இப்படத்தில் சமூகத்திற்குத் தேவையான அவசியமான செய்தியும் இருக்கும்” என்றார்.

படம் குறித்து நடிகை லவ்லின் சந்திரசேகர் கூறுகையில், “இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் அற்புதமான திரைக்கதையில் நடிப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் நான் அழகான மற்றும் தைரியமான இளம் பெண்ணாக நடிக்கிறேன். ஒரு மிகச்சிறந்த திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் நன்றி” என்றார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க, வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். பி.எல்.சுபேந்தர் கலை இயக்கம் செய்ய, படத்தொகுப்பை ஆர்.ராமர் கையாள்கிறார். விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகன் விஜயை வைத்து புதிய படத்தை இயக்கும்.. இயக்குநர் முத்தையா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.