ETV Bharat / entertainment

‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முதல் சிங்கிள் கோவை கல்லூரி விழாவில் வெளியானது! - First Single

Yezhu Kadal Yezhu Malai: இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியானது.

ஏழு கடல் ஏழு மலை
ஏழு கடல் ஏழு மலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 8:16 AM IST

Updated : Feb 15, 2024, 4:32 PM IST

ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் சிங்கிள் வெளியானது

கோயம்புத்தூர்: நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஜெயம் ரவி, ஏழு கடல் ஏழு மலை படத்தின் இயக்குநர் ராம், நடிகை அஞ்சலி, அனிகா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாக உள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முதல் சிங்கிள் பாடலை நடிகர் சித்தார்த் பாடியுள்ளார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய இயக்குநர் ராம், "காதலர் தினத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. காதல் மனிதன் உருவானதற்கு முன்பில் இருந்தே உலகத்தில் இருந்து வருகிறது. காதல் என்பது பாலின வேற்றுமை, சாதி, மதத்தை தாண்டியது. காதல் என்கிற பிரபஞ்ச சக்திதான் இந்த உலகத்தை தன் கையில் பிடித்து வைத்திருக்கிறது.

ஏழு கடல் ஏழு மலை படம் உருவாக காரணம் கடந்த 2019இல் “மனித குலம் நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு” என்ற புத்தகத்தை படித்தேன். அதில் ஒரு பகுதியில் இரண்டாம் உலகப் போர் நடைபெறுகிறது. மிகப்பெரிய அழிவுகள் நடந்த காலம், அப்போது ராணுவ கமாண்டர் ஒருவர், தனது வீரர்களுக்கு எதிரே உள்ள மனிதர்களை சுட உத்தரவிடுகிறார்.

நூறு பேர் இருந்தாலும் 10 பேர் மட்டுமே சுடுவார்கள், மற்ற யாவரும் சுட மாட்டார்கள், நடிப்பார்கள். காரணம் இயல்பாகவே மனிதர்கள் மற்றொரு மனிதனை சுட மாட்டார்கள். மனிதனால் மற்றொருவரை வெறுக்கவோ, துன்புறுத்தவோ முடியாது. மனிதன் தன்னுடைய அனைத்து வேறுபாட்டையும் தாண்டி, கரம் கோர்த்து நிற்பான் என்பதை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்த கதை.

நீங்களும் அந்தப் புத்தகத்தை படிக்கும்போது மனதில் மகிழ்ச்சி தரும். நீங்கள் எவ்வளவு அன்பாளர்கள் மற்றும் உங்களிடம் எவ்வளவு காதல் உள்ளது என்பது புரியும். காதல் உங்களை வேறொரு மனிதனாக மாற்றும். உற்சாகம் பெற்றவனாக, மேலும் இசை, கவிதை, நடனம் ஆகியவற்றை ரசிக்கத் தூண்டும்.

அந்த புத்தகத்தின் பாதிப்பு, இந்த தத்துவத்தின் அடிப்படையில் உருவானதே ஏழு கடல் ஏழு மலை திரைப்பட. எனது முந்தைய நான்கு படங்கள் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், எனது ஐந்தாவது படமான ஏழு கடல் ஏழு மலை நிச்சயமாக பிடிக்கும். இந்த படம் முழுக்க முழுக்க மானுடத்தின் காதலைப் பற்றியும், இந்த உலகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே பேசுகிறது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காதலர் தினத்தைக் கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி! எனது தங்கத்துடன் ஒரு தசாப்தம்..

Last Updated : Feb 15, 2024, 4:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.