சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் (Greatest of all time) திரைப்படம், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.
கோட் படத்தில் இதுவரை வெளியான பாடல்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், இன்று நான்காவது சிங்கிள் 'மட்ட' பாடல் வெளியாகியுள்ளது. விஜயின் கலக்கல் நடனத்தில் மட்ட பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலின் லிரிக் வீடியோவில் இதுவரை விஜய் நடித்து வெளியான போக்கிரி, துப்பாக்கி, மெர்சல், மாஸ்டர் ஆகிய படங்களின் மேனரிஸம் இடம்பெற்றுள்ளது.
இந்த குத்து பாடலுக்கு படத்தில் த்ரிஷா நடனமாடியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் நன்காவது பாடல் ரசிகர்களை கண்டிப்பாக திருப்திபடுத்தும் என கூறியுள்ளனர். மேலும், படத்தின் கிளைமாக்ஸ் வரை பல சர்ப்ரைஸ் உள்ளதாகவும் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கூறியுள்ளனர்.
டிரெய்லர் வெளியாகி படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள நிலையில், இப்பாடல் மேலும் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. திரையரங்கில் விஜயின் நடனத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “நடிகைகளின் கேரவன்களில் கேமரா”.. நடிகை ராதிகா பகீர் குற்றச்சாட்டு! - Radhika about hema committee