ETV Bharat / entertainment

நெல்லை: கோட் பட ரிலீஸை செண்டை மேளத்துடன் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்! - GOAT Movie Celebration - GOAT MOVIE CELEBRATION

Vijay fans Celebrate in goat release: நெல்லையில் கோட் திரைப்படம் வெளியான நிலையில், திரையரங்குகளில் ரசிகர்கள் செண்டை மேளம் முழங்க ஆட்டம் பாட்டம் என உற்சாகத்தோடு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
ரசிகர்கள் கொண்டாட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 11:52 AM IST

திருநெல்வேலி: வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படம் இன்று (செப்.5) நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானதை முன்னிட்டு, விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் இன்று காலை 9 மணிக்கு கோட் திரைப்படம் வெளியான நிலையில், மாநகரில் உள்ள திரையரங்குகளில் காலை முதல் விஜய் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். குறிப்பாக, நெல்லை சந்திப்பு மதுரை சாலையில் உள்ள ராம் முத்துராம் திரையரங்கில் விஜய் ரசிகர்கள் சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோட் பட கொண்டாட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திரையரங்க வளாகம் முழுவதும் கோட் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து ஆளுயர கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, செண்டை மேளம் முழங்க ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நடிகர் விஜயின் முந்தைய திரைப்பட பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு, ரசிகர்கள் குத்தாட்டம் ஆடி, கோட் திரைப்படத்தை வரவேற்றனர்.

குறிப்பாக, நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் இப்படத்திற்குப் பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முன்னணி நடிகர்களான பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் விஜயுடன் இணைந்து நடித்திருப்பதால், கோட் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தியேட்டரிலேயே கோட் பட டிக்கெட் ரூ.2 ஆயிரமா?.. கேரளா விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.