சென்னை: தமிழ் த்ரில்லர் திரைப்படமான பகலறியானின் டீசர் வெளியானது. முருகனின் இயக்கத்தில், லதா முருகனின் தயாரிப்பில் இப்படம் வெளிவர உள்ளது. '8 தோட்டாக்கள்' மற்றும் 'ஜீவி' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள வெற்றி, இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், பிரபல நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால், இப்படத்திற்கு பகலறியான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விவேக் சரோவின் இசையில், அபிலாஷ் PMYன் ஒளிப்பதிவில் இப்படம் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்திற்கான மூலக்கதை கிஷோர்குமார் எழுதியுள்ளார். மேலும், கோபி கருணாநிதி கலை வடிவமைப்பாளராகவும், ராம் குமார் சண்டை பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் டீசரை பிரபல நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
இதையும் படிங்க: தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன்.. முதல் படம் எப்போது? - Nelson Filament Pictures