ETV Bharat / entertainment

"எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்".. ஹேமா கமிட்டி குறித்து வெங்கட் பிரபு! - Venkat prabhu about hema committee - VENKAT PRABHU ABOUT HEMA COMMITTEE

Venkat Prabhu about Hema committee: சினிமாத்துறை மட்டுமல்லாமல் ஐடி, வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது நம் அனைவரது பொறுப்பு என இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு புகைப்படம்
வெங்கட் பிரபு புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 3, 2024, 12:46 PM IST

சென்னை: மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கேரள அரசு ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. அனைத்து மொழி சினிமா துறையிலும் ஹேமா கமிட்டி பெரும் பேசுபொருளான நிலையில், மலையாள நடிகைகள் பலர் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக பல்வேறு மொழியைச் சேர்ந்த கலைஞர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகை ராதிகா, மலையாள திரைத்துறையில் படப்பிடிப்புத் தளத்தில் கேரவனில் கேமரா இருந்ததாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஹேமா கமிட்டி அறிக்கை குறித்தும், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்தும் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது முக்கியம். அதற்கான ஆரம்பமாக கேரளா ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் பிரச்னையை தைரியமாக பொது வெளியில் பேசுகின்றனர். இனி எந்த பெண்களும் பாதிக்கப்படக்கூடாது என பெண்கள் பேசுகின்றனர். சினிமாத்துறை மட்டுமல்லாமல் ஐடி, வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது நம் அனைவரது பொறுப்பாகும். பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தைரியமாக பொது வெளியில் பேச வேண்டும்” என கூறியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "அஜித், விஜய் போன்றவர்களை தவிர சினிமாவில் மற்றவர்கள் வாழ்க்கை இப்படித்தான்" - ஆர்.கே.செல்வமணி வேதனை! - RK Selvamani

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.