சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.
அதேபோல் தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்கள் கருணாநிதியின் நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர். மேலும் கருணாநிதி நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் வரை திமுகவினரால் கொண்டாடப்பட்டது. தமிழ்த் திரைப்பட உலகில் தனது புரட்சிகரமான வசனங்கள் மூலம் புதிய எழுச்சியை கொண்டு வந்த கருணாநிதி, அதன்பிறகு தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தார்.
இன்று கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திரைப்பட பாடலாசிரியர், கவிஞருமான வைரமுத்து, கருணாநிதியின் நினைவிடம் மற்றும் கோபாலபுரம் வீட்டில் தனது அஞ்சலியை செலுத்தினார். மேலும் தனது எக்ஸ் தளத்தில் கருணாநிதி குறித்து பதிவிட்டுள்ளார்.
உன்
— வைரமுத்து (@Vairamuthu) August 7, 2024
பிறந்தநாளுக்கும்
நினைவுநாளுக்கும்
வேறுபாடு ஒன்றுண்டு
நீ பிறந்த நாளில்
ஒரே ஒரு தாய்க்கு மட்டுமே
பிள்ளையாகினாய்
நினைவு நாளில்
தாய்த் தமிழ் நாட்டுக்கே
மகனாகினாய்
குடகுமலை மழையால்
மேட்டூர் நீர்மட்டம்
உயர்வது மாதிரி
ஒவ்வோர் ஆண்டிலும்
உன் புகழ்மட்டம்
கூடிக்கொண்டே போகிறது… pic.twitter.com/4Riom9sHg9
அதில், “உன் பிறந்தநாளுக்கும் நினைவுநாளுக்கும் வேறுபாடு ஒன்றுண்டு, நீ பிறந்தநாளில் ஒரே ஒரு தாய்க்கு மட்டுமே பிள்ளையாகினாய், நினைவு நாளில் தாய்த் தமிழ் நாட்டுக்கே மகனாகினாய். குடகுமலை மழையால் மேட்டூர் நீர்மட்டம் உயர்வது மாதிரி, ஒவ்வோர் ஆண்டிலும் உன் புகழ்மட்டம் கூடிக்கொண்டே போகிறது. வணங்குகிறோம் உங்களை; வாழ்த்துங்கள் எங்களை” என்று பதிவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் பிரபாஸ் ரூ.2 கோடி நிதியுதவி - Prabhas donates for wayanad