சென்னை: இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், நடிகர் ஷேன் நிகம் நடிப்பில் உருவாகி உள்ள படம் மெட்ராஸ்காரன். இப்படம் மூலம் ஷேன் நிகம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை நிஹாரிகா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் கலையரசன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார். மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படத்தை SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது.
Extremely elated and happy to reveal the fierce teaser of the action packed #Madraskaaran🔥. My sincere wishes to the entire cast and crew of the film.
— Silambarasan TR (@SilambarasanTR_) July 24, 2024
https://t.co/YvMLgWS8zK
Produced by- @SR_PRO_OFFL
A @SamCSmusic Musical @ShaneNigam1 @IamNiharikaK@vaali_mohandas… pic.twitter.com/6O8OYyj9Ni
இறுதிகட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழா மேடையில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது, "என் புரடியூசர் ஜெகதீஸ் மற்றும் இந்த படம் ஆரம்பமாக காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவருக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து கதையை முழுதாக கூட கேட்காமல் தயாரித்தார். இந்த படம் பற்றி அனைவரும் சொல்லி விட்டனர். படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் நன்றி" என்றார்.
நடிகர் ஷேன் நிகம் பேசியதாவது, "அன்புள்ள மனிதர்களுக்கு வணக்கம், என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனது நிறைவாக இருக்கிறது. வாலி ப்ரோ, ஜெகதீஸ் ப்ரோ இருவருக்கும் நன்றி. என் மீது எனக்கு சந்தேகம் இருந்தபோது வாலியும், ஜெகதீஸும் என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். என் பட டீசரை வெளியிட்ட நடிகர் எஸ்.டி.ஆருக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.
நடிகர் கலையரசன் பேசியதாவது,"மெட்ராஸ்காரன், என் ஊர் மெட்ராஸ். ஆனால் இந்த படத்தில் நான் புதுக்கோட்டை ஆளாக நடித்துள்ளேன். ஷேன் நிகம் மிக அருமையான நடிகன். அவருடன் நடித்தது மிக மகிழ்ச்சி. வாலி அவர் முன்பு செய்த படத்தின் டீசர் காட்டினார் மேக்கிங் பிடித்திருந்தது. படத்தின் கதையும் பிடித்தது. உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். படம் அருமையாக வந்துள்ளது.
சின்னப்படம், பெரிய படம் என்பதெல்லாம் முக்கியமில்லை நல்ல படத்தில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம். இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஸ் மிக ஆதரவாக இருந்தார். கதையை நம்பி நல்ல படத்தை எடுத்துள்ளார். எல்லோருக்கும் நன்றி” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "மிக மோசமான அரக்கன் மனிதன்".. யோகி பாபு நடிக்கும் போட் பட ட்ரெய்லர் வெளியானது! - BOAT movie trailer out