ETV Bharat / entertainment

உறியடி விஜயகுமாரின் 'எலக்சன்' திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Election Movie Release Date - ELECTION MOVIE RELEASE DATE

Election Movie Release Date: உறியடி விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘எலக்சன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Election Movie Release Date
எலக்சன் திரைப்படம் ரிலீஸ் தேதி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 2:13 PM IST

சென்னை: 'உறியடி', 'பைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஜயகுமார். இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் 'எலக்சன்' திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எலக்சன்' திரைப்படத்திற்கு, எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி.எஸ்.பிரேம்குமார் கையாண்டிருக்கிறார்.

எலக்சன் திரைப்படத்தில் நடிகர் விஜயகுமார், 'அயோத்தி' புகழ் ப்ரீத்தி அஸ்ரானி, ரிச்சா ஜோஷி, வத்திக்குச்சி திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை, ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்துள்ளார்.

தற்போது, இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்குத் தயாராகியுள்ளது. இப்படத்தில், இடம்பெற்ற 'எலக்சன்' தொடர்பான பாடல் காட்சிகள் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல்கள் மக்களவைத் தேர்தல் கால தருணத்தில் வெளியிடப்பட்டதாலும், படத்தின் மையக்கருவை பிரதிபலிக்கும் வகையில் இடம் பெற்றதாலும், வெளியான குறுகிய காலத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது.

இதனையடுத்து, படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், வரும் மே 17ஆம் தேதியன்று திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தேனி ஸ்ட்ராங் ரூமில் அத்துமீறி நுழைந்ததாக கல்லூரி முன்னாள் ஊழியர் கைது! - Theni Strong Room Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.