ETV Bharat / entertainment

'கோட்' சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி! எத்தனை மணிக்கு ஸ்பெஷல் ஷோ? - GOAT special show

GOAT special show: விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கோட் போஸ்டர்
கோட் போஸ்டர் (Credits - AGS Entertainment)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 4, 2024, 4:34 PM IST

Updated : Sep 4, 2024, 5:08 PM IST

சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’கோட்’ திரைப்படம் நாளை (செப் 5) வெளியாகிறது. இப்படத்தில் மோகன், பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் தயாராகியுள்ள கோட் திரைப்படம் நாளை (செப் 5) வெளியாகிறது. ஏற்கனவே கோட் படத்தின் முன்பதிவு உலகம் முழுவதும் தொடங்கியுள்ள நிலையில், இதுவரை 23 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் கோட் படத்தின் முதல் காட்சி இந்திய அளவில் கேரளாவில் காலை 4 மணிக்கு திரையிடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து ஐ-மேக்ஸ் தொழில்நுட்பத்தில் கோவையில் காலை 7.30 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. இந்நிலையில் 'கோட்' படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி நாளை (செப் 5) காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 900 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் யார்? - பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று வெளியாகிறது அறிவிப்பு! - Biggboss season 8

Last Updated : Sep 4, 2024, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.