சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபத்தி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படம் இன்று (அக்.10) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சென்னை ரோகிணி திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், அவரது மகள்கள் ஐஷ்வர்யா, சவுந்தர்யா, நடிகர் தனுஷ், அனிருத் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் படம் பார்த்தனர். இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
#Vettaiyan [#ABRatings - 3.5/5]
— AmuthaBharathi (@CinemaWithAB) October 10, 2024
- Superb first half with an above average second half 🤝
- Opening Superstar #Rajinikanth scene, Investigation portions of first half, 2nd half mass fight sequence & some emotional portions worked well🔥
- Few lags in second half & Predictability… pic.twitter.com/ti6UwMGoCC
இந்நிலையில் வேட்டையன் படம் பார்த்த அனிருத்தின் தந்தை, நடிகர் ரவி ராகவேந்திரா, “வேட்டையன் திரைப்படம் மாஸ் மற்றும் கிளாஸ் கலந்து எடுக்கப்பட்டுள்ளது. டி.ஜே.ஞானவேல் ஸ்டைல் மற்றும் ரஜினிகாந்த் ஹீரோயிஸம் சேர்த்து மிகவும் நன்றாக உள்ளது” என்றார். மேலும் அனிருத்தின் இசை கதைக்கு ஏற்றார் போல் உள்ளது என்றார். தமிழ் அளவிற்கு தெலுங்கில் அனிருத்திற்கு நல்ல மார்க்கெட் உருவாகியுள்ளது என்றார்.
இதனைத்தொடர்ந்து வேட்டையன் படம் பார்த்த ரசிகர் ஒருவர் பேசுகையில், “இந்த படத்தில் ராணா, ஃபகத் ஃபாசில், என அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். தலைவரை மாஸாக காட்டியுள்ளனர். குழந்தைகளை பெற்றோர் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே வேட்டையன் படத்தின் கருத்து” என கூறியுள்ளார்.
வேட்டையன், ஜெயிலர் திரைப்படத்தை விட பட்டி தொட்டியெங்கும் சென்றடையும் என படம் பார்த்த மற்றொரு ரசிகர் கூறினார். மேலும் வேட்டையன் திரைப்படத்தின் ஒவ்வொரு ஷாட்டையும் ஞானவேல் நன்றாக உருவாக்கியுள்ளார். கதைக்கு ஏற்றார் போல் ரஜினி மற்றும் அமிதாப் பச்சனுக்கு மாஸ் காட்சிகள் உள்ளது என்றார்.
மற்றொரு ரசிகர் பேசுகையில், ரஜினிகாந்திற்கு அடுத்து அனிருத் படத்தை தாங்கியுள்ளார். ரஜினிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால் ரஜினிக்கு ஒரு மகனாக அனிருத் தனது இசை மூலம் இப்படத்தை தாங்கியுள்ளார் என கூறினார். இது ஒரு புறம் இருக்க, சமூக வலைதளத்தில் வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: வேட்டையன் ரிலீஸ்: ரஜினி பூரண நலம்பெற வேண்டி மயிலாடுதுறை ரசிகர்கள் கூட்டுப் பிரார்த்தனை!
வேட்டையன் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் கலவையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. மேலும் டி.ஜே.ஞானவேல் கல்வியில் நடக்கும் ஊழல் குறித்து இப்படத்தில் பேசியுள்ள கருத்தும் பாராட்டை பெற்று வருகிறது. ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், வேட்டையன் கலைவையான விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்