ETV Bharat / entertainment

'அமரன்' படம் பாத்துட்டிங்களா?... இன்று ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் பெரிய படங்கள் என்ன தெரியுமா? - TAMIL OTT RELEASES

Tamil OTT releases: திரையரங்குகளில் அமரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 8, 2024, 12:51 PM IST

சென்னை: கடந்த வாரம் தீபாவளிக்கு வெளியான படங்களால் இந்த வாரம் கோலிவுட்டில் எப்போதும் இல்லாத வகையில் 'இரவினில் ஆட்டம் பார்' என்ற ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு வெளியான படங்களில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

அடுத்த வாரம் சூர்யாவின் கங்குவா வெளியாக உள்ளதால் இந்த வாரம் பெரிய அளவில் படங்கள் வெளியாகவில்லை. ஆனால் ஓடிடியில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்து காத்துக் கொண்டு இருக்கிறது. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து இந்த செய்தியில் காணலாம்.

வேட்டையன்: ஜெய்பீம் என்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் 'வேட்டையன்'. இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபத்தி, ரித்திகா சிங், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. என்கவுண்டர் கொலை பற்றி பேசிய வேட்டையன் திரைப்படம் சர்ச்சையை கடந்து வெற்றி பெற்றது. அனிருத் இசையில் பாடல்களும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இப்படம் இன்று (நவ.08) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தேவரா: தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சயிஃப் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் தேவரா. கடந்த செப்.27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான தேவரா திரைப்படம் தமிழில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். தேவரா திரைபடம் தெலுங்கில் வசூல் சாதனை படைத்திருந்தாலும் தமிழில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் தேவரா திரைப்படம் இன்று (நவ.08) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஏஆர்எம்: மின்னல் முரளி படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டொவினோ தாமஸ். இவர் நடித்த 2018 திரைப்படம் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஜிதின் லால் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்து வெளியான திரைப்படம் 'ஏஆர்எம்' (ARM).

இதையும் படிங்க: சூர்யா VS தனுஷ்... ஒரே நாளில் வெளியாகும் படங்களால் சூடுபிடிக்கும் கோலிவுட்!

ஆக்ஷன் அட்வென்சர் படமாக உருவான ஏஆர்எம் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து. இந்நிலையில் ஏஆர்எம் திரைப்படம் இன்று (நவ.08) டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.