சென்னை: ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய், மோகன், பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து 4 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றியுள்ளார். ஏற்கன்வே இதுகுறித்து அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து திரைகளிலும் தி கோட் படம் வெளியாக உள்ளதாக தெரிவித்தார்.
Bookings open today 🙌🔥🔥
— Archana Kalpathi (@archanakalpathi) September 1, 2024
Make way for the GOAT of Collections@actorvijay Sir
A @vp_offl Hero#TheGreatestOfAllTime#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@Ags_production@archanakalpathi @aishkalpathi @thisisysr @actorprashanth @PDdancing @dhilipaction… pic.twitter.com/ARQVgIGhPy
இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஸ்ரீதரிடம் கேட்டபோது, "தமிழகத்தில் உள்ள 1100 திரைகளிலும் கோட் திரைப்படம் வெளியாக வாய்ப்பில்லை. ஒருசில இடங்களில் டிக்கெட் புக்கிங் தொடங்கிவிட்டது.
தி கோட் படத்திற்கு திரையரங்குகள் உரிமையாளர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், அனைத்து திரைகளிலும் படம் வெளியாக வாய்ப்பு இல்லை. ஒரு ஊரில் ஐந்து திரையரங்குகள் இருந்தாலும், அனைத்திலும் படம் திரையிட மாட்டார்கள். 700க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : "லோகேஷ் மாதிரியே பிரேம்குமாரும் என்னைய வச்சு செஞ்சுட்டாரு" - நடிகர் கார்த்தி கலகல பேச்சு! - Actor Karthi