ETV Bharat / entertainment

தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள திடீர் கட்டுப்பாடு; விஷாலை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் புதிய படங்களுக்கும் சிக்கல்? - dhanush new movie restrictions

Actor Dhanush: தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக, நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று அச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தனுஷ்
தனுஷ் (Credits - Dhanush X Page)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 29, 2024, 3:59 PM IST

சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றிய தீர்மானங்களை தயாரிப்பாளர் சங்கம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதில், "இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கெனவே அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களில் பணிபுரியாமல், புதியதாக வரும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று விடுகிறார்கள்.

இதனால், ஏற்கெனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை
சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகையால், இனிவரும் காலங்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் பெற்றிருந்தால் அந்த திரைப்படத்தினை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று இக்கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது.

அதன்படி, நடிகர் தனுஷ் அவர்கள் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில், இனிவரும்
காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, நடிகர் விஷால் சங்க நிதியை தவறாக பயன்படுத்தியதால் இனிவரும் காலங்களில் நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசித்து தங்களது பணிகளை துவங்க வேண்டும் என்று சங்கம் அறிவுறுத்தி உள்ளது. தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படம் கடந்த 26 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆரம்பிக்கலாமா? 'தக் லைஃப்' படத்தின் டப்பிங் பணியை தொடங்கினார் கமல்ஹாசன்! - thug life dubbing

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.